பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'சத்தியம் வாங்கி விட்டார்' 119 தோல் உரிக்க உத்தரவு கொடுத்துவிட்டுப் பேயாண் டித் தேவனை இரகசியமாய வரவழைத்து அவனுடன் பேச்சுக்கொடுத்து கள்ளைக் குடம் குடமாய்க் குடிக்கச் செய்து அந்த மயக்கத்தில் சுப்பிரமணியய்யர் வீட்டில் கொள்ளையிடும்படி சத்தியம் வாங்கிவிட்டார். பேயா ண்டி மயக்கம் தெளிந்த பிறகு, தான் செய்த சத்தியத் தைக் குறித்து வருத்தப்பட்டான். முத்துஸ்வாமியய் யர் ஒருவரிடத்தில் அவனுக்கு உண்மையான பயமும் விசுவாசமும் இருந்தாலும் சத்தியம் கொடுத்தாய் விட்டபடியால் திருடிவிட வேண்டியது அவசிய மாயிற்று. ஆனால் மேஜை நாற்காலி கொண்டுவந்து போட்டுக்கொண்டு பகிரங்கமாகத் திருடுகிற தன் வழக்கத்துக்கு விரோதமாய் முத்துஸ்வாமி அய்யரை உத்தேசித்து திருட்டுத்தனமாய் சாதாரணத் திருடர் போல் அன்று திருட வந்தான். வந்த சமயத்தில் சுப் பிரமணியய்யரும் அவர் மனைவியும் ராத்திரி நெடு நேரம் தூக்கம் விழித்ததால் அயர்ந்து தூங்கிக்கொண் டிருந்தார்கள். பொன்னம்மாள் புருஷனுக்கு மருந் திட்டதில் முதல் முதல் கைகண்ட பலன் அவளுக்கு 3000- ரூபாய் நகை பலித்தது. திருடினது பேயாண் டித் தேவன் தான் என்று கேட்ட முத்துஸ்வாமி அய்ய ருக்கு அச்சமும் கோபமும் உண்டாயிற்று. அவர் 'நம்மை விடக் கோமளநாயக்கனூர்ப் பயல் அவனுக் குப் பெரிதாய்ப் போய்விட்டானா, இருக்கட்டும்' என்று சொல்லி சப் மாஜிஸ்திரேட்டு வைத்தியநாதய் யருக்கு ஆள் அனுப்பினார். பேயாண்டித் தேவனைப் பிடிக்க நெடுநாளாய் போலீஸ்காரர்கள் தலைகீழாக நின்று பிரயத்தனம் பண்ணியும் பலிக்கவில்லை. வைத் தியநாதய்யர் வேலைத் திறமைக்காகப் பிரசித்திபெற்ற வர். பேயாண்டித் தேவனைப் பிடித்துக்கொடுப்பதற் காகவே அவரைச் சர்க்காரில் முக்கியமாய் அந்தப் பக் கத்துக்கு அனுப்பினார்கள். அவர் வந்து இரண்டு வருஷமாயும் அவன் அவர் கையில் அகப்படவில்லை.