பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



132 கமலாம்பாள் சரித்திரம் கிறேன், சாதத்தை எறிந்துவிட்டுப் போய்விடுகிறேன் பார்' என்று கோபித்துக் கொண்டான். சாதத்தை எறிந்து விட்டால் யாருக்கு நஷ்டம் என்பது பட வில்லை. அப்படி எறியவும் மனது வரவில்லை. 'வரட்டும் சொல்லுகிறேன்' என்று சொல்லிக்கொண்டே, தெய் வமேயென்று ஒருதரம் வைகிறது, ஒருபிடி சாப்பிடு கிறது, மறுபடி வைகிறது மறுபடி சாப்பிடுகிறது, இப்படியாக சாப்பிட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தான். இவ்விதமாக ஒவ்வொரு வீட்டிலும் போட்டது போட்டபடியே சுப்பு, சேஷி, வேம்பு, நாகு, அம்மாப் பொண்ணு, அலமேலு, நாணி, சாச்சி, சிட்டம்மா, எச்சி, பாப்பு, (நம்முடைய ஸ்திரீகள் பெயர்கள் தான் எவ்வளவு அழகாயிருக்கின்றன!) முதலிய எல்லாப் பெண்டுகளும் பட்டாளம் பட்டாளமாகப் புறப்பட்டு விட்டார்கள். பாப்பாபட்டியகத்து' வெட்டரிவாள் என்று பட்டப் பெயர் பெற்ற குப்பிப்பாட்டியோ எல்லோருக்கும் முன்னமே முதல் பாலத்துக்கே போய்க் காத்துக்கொண்டிருந்தாள். பேயாண்டித் தேவனும் வந்து சேர்ந்தான். அவன் வருகையென்ன திருடனைக் கச்சேரிக்குப் பிடித்துக் கொண்டு போவது போலவா இருந்தது. சட்டை தொப்பி தரித்த போலீஸ் உத்தியோகஸ்தர்கள் பல் லக்குச் சுமக்க, உருவின கத்தியும் கையுமாய் சிப் பாய்கள் முன்னே செல்ல, முத்துஸ்வாமியய்யர் முத லிய மகா ஜனங்கள் பின்னே வர, ஸ்திரீகள் 'கட் டேலே போவான் மூஞ்சியைப் பாரடி, கரியாப் போவான், மீசையும் அவனும்' என்று வழிநெடுகப் பல்லாண்டு பாட, இவ்வளவு கோலாகலத்துடன் ராஜ கம்பீர வீரமார்த்தண்ட சங்கிலி வீரப்ப பேயாண்டித் தேவர் அவர்கள் (வண்டிக்கூடாகிய) பல்லக்கின்மேல் கம்பீரமாய் உட்கார்ந்து கஞ்சா , புகையிலை முதலிய வாசனைத் திரவிய சஹிதம் தாம்பூலந் தரித்துக்கொண்