பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கெட்ட நாய்க்குப் பட்டதுறுதி 145 - - காயிருக்க அதைக் கண்ட ஸ்ரீநிவாசனுக்கு நதியாய் ஓடவும், இலைகளாய் ஆடவும், பட்சியாய்ப் பறக்கவும், நட்சத்திரமாய் உலாவவும், ஆசையாயிருந்தது. மண லில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களும், ஆனந்த நர்த்தனம் செய்யும் சந்தியா தேவியினுடைய மோக வலையிலகப்பட்டு சங்கீதத்தால் மயக்க முற்றுப் படம் விரித்து ஆடும் பாம்புகளைப்போல் ஆடுபவர்களாக அவனுக்குத் தோன்றினார்கள். படமெடுத்தாலும் பாம்பு பாம்பே என்பதை மறந்து இங்குக் கூடிய சிறு வர்கள் மானிடக் குரோதங்களை ஒழித்து உயரப் பறக் கும் விஞ்சையர் குழாமென அவன் மதித்து, அவர் களுடன் தானும் விளையாட இணங்கினான். விளை யாட்டு நடந்தது. ஒவ்வொருவரும் ' பலீன் சடு சடு' என்ற பீஜாட்சரத்தை ஜபித்துக்கொண்டு பகைவர் மீது படையெடுத்து முறைப்படி சென்றார்கள். ஸ்ரீநிவாசனுடைய முறையும் வந்தது. அவன் 'பல், பல், பலீன், பலீன் சடுகுடு' என்று பாடிக்கொண்டு போகும்போது மூச்சு விட்டான் என்று பொய்யாவது சொல்லி அவன் மேலே கொக்கைப்போலக் குறி வைத்திருந்த வைத்தியநாதன் அவனைப் பிடித்துக் கட்டிக் கீழே தள்ளி மணலில் தேய்த்து அடித்துக் கிள்ளிக் காயப்படுத்தினான். யார் வந்து விலக்கியும் அந்த முரட்டுப் பயலைத் தடுக்க முடியவில்லை. ஸ்ரீநி வாசன் பாவம் கதறுகிறான். அவனை அந்த மூர்க்க னிடத்திலிருந்து தப்புவித்து வீடு கொண்டுபோய்ச் சேர்ப்பது வெகு கஷ்டமாய் விட்டது. அவனுடைய சரீரம் மிக மிருதுவானதால் எங்கே பார்த்தாலும் கீற லும் காயமுமாக ஆய்விட்டது. நடந்த சங்கதியை அவன் வீட்டில் யாரிடத்திலும் சொல்லவில்லை. ஆனால் முத்துஸ்வாமி அய்யர் இவ்வளவும் நடந்துகொண் டிருந்த போது ஆற்றங்கரையில் சந்தியாவந்தனம் பண்ணிக்கொண்டிருந்தார். அங்கிருந்த பையன்கள் அவரிடத்துப் போய்ச் சகல சமாசாரத்தையும் விஸ் 10