உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நாய் வேஷம் போட்டால் குலைக்க வேணும் 147 பேசினால் பல்லுடைந்து போகும் ; ஆள் எந்தவூர்ப் பேர்வழி யென்று பார்த்துக்கிட்டீம்' என முத்து ஸ்வாமி அய்யருக்கு கோபம் காற்றுச் சேர்ந்த நெருப் புப்போல் எரிகிறது. அவர் தம்பியைப் பார்த்து 'உனக்கு சரியாயிருக்கிறதா' என்று கேட்டார். சுப்பிர மணியய்யர் வைத்தியநாதனுக்குப் பரிந்து கொண்டு ' அவன் மேல் குற்றம் ஒன்றுமில்லாதபோது கோபித் துக்கொண்டால் யார்தான் பொறுப்பார்' எனவே, முத்துஸ்வாமியய்யர் ' ஒரு குற்றமுமில்லையா, நல்லது நீ என்ன செய்வாய், என் புத்தியைச் செருப்பாலடிக்க வேணும்' என்று பின் வாங்கினார். அவர் தணிவதைக் கண்டு வைத்தியநாதன் சந்தேகத்துக்காக வைத்திருந்த சொற்ப மரியாதையையும் விட்டுவிட்டு ஏகவசனப் பிரயோகத்திலாரம்பித்துச் சரமாரியாய் ஹிந்துஸ் தானி துலுக்கு வார்த்தைகளுடன் இங்கு சொல்லத் தகாத வசவுகளை வாரி வீச, அவன் இரைச்சலைக் கேட்டு ஜனங்கள் ஏகமாக வந்து கூடிவிட்டார்கள். கூடிய ஜனங்கள் தாங்கள் தெய்வமாய்ப் பாராட்டி வந்த முத்துஸ்வாமியய்யரை நோக்கி இவ்வளவு அக் கிரமாய்ப் பேசிய வைத்தியநாதன் பயலைக் காலையும் கையையும் கட்டி மிதிமிதியென்று மிதிக்கத் துவக்கி னார்கள். பெருந்தன்மையே பிறவிக்குணமாகவுடைய முத்துஸ்வாமியய்யர் ' அவன்மேல் என்ன தப்பிதம் பாவம்! என்னுடைய வேளைப்பிசகு! அவனையடிக்கா தேயுங்கள் ! விட்டுவிடுங்கள். விட்டுவிடுங்கள்' என்று மன்றாடி அவனை விடுவித்தார். விடுவித்து விட்டு தன் வீட்டை நோக்கி வெகு விசனத்துடன் சென்றார். அதன் பிறகாவது வைத்தியநாதன் என்ற துஷ்டப் பயலுக்கு விவரம் வந்ததா? இல்லை, அவன் முன்னி லும் பதின் மடங்கு பிதற்றினான். பொன்னம்மாள் கலகம் நடந்த இடத்திற்குச் சமீபத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்க்க வந்த பெண்டுகள் கூட் டத்தில் முத்துஸ்வாமியய்யரைக் குறித்து அலட்சிய