150 கமலாம்பாள் சரித்திரம் தருவாயில் அவன் தடியும் கையுமாய் வீட்டுக்குள் வந்ததில் அந்தப் பிராமணர் நடுநடுங்கிப் போய்விட் டார். அவரை பயப்படச் செய்யவேண்டுமென்றே தான் அவனும் அப்படி வந்தான். வந்தவுடன் அவர் அருகில் அவர் சொல்லாமலே உட்கார்ந்து மீசையை இருகையாலும் முறுக்கிக்கொண்டு வளை தடியை ஓசைப்படக்கீழே போட்டு 'சாமி யெல்லாம் இப்போ சருக்காரு சாமியாய்ப் போயிருச்சு. இன்னமே இந்தக் கள்ளப்பயல்களுக்கும் நமக்கும் தீர்ந்து போயிருச்சு என்றுதானே சாமி இப்படி யெல்லாம் பண்ணிக் கிட்டுத் திரிகிறீக? செய்கிற தெல்லாம் செய்யுங்க சாமி , எங்களுக்காச்சு உங்களுக்காச்சு, ஒருகை பார்ப் போம்' என, சுப்பிரமணியய்யர் நடுநடுங்கி ' என்ன சுப்பாத்தேவா, எப்படியோ ஆரம்பித்து எப்படியோ போய் முடிந்தது. நிசமாகச் சொல்லுகிறேன் கேளு. சுப்பாத்தேவா, உன்னிடம் சொல்லுவதற்கு என்ன! உங்களப்பனும் நம்முடைய ஐயாவும் இருந்த நேசத் துக்கு என்னமோ அப்பா நாம் நம்ம தலைமுறைமட்டு மாவது கொண்டு செலுத்திவிட்டோமானால் கீழ்க் கடைகள் என்னமும் பண்ணிக்கிறது. நான் என்ன எல்லாமோ எண்ணிக்கொண்டிருந்தேன். நம்முடைய எண்ணப்படி என்னதான் நடக்கிறது!' என, சுப்பாத் தேவன் ' ஏன் நீங்கள் எண்ணினதற்கு இப்போது தான் என்ன குந்தகம் வந்திடிச்சு, எல்லாம் நீங்களாப் பண்ணிக்கிட்ட காரியந்தானே. என்னமோ சாமி. ஒங்க சருக்காரதிகாரத்திலே பேயாண்டித் தேவனை வெண்ணாப் பிடிச்சுவைச்சுப்பிட்டீர்கள். எங்க குலம் கூட்டம் முழுக்க வைச்சுப்பிடமுடியுமா? இல்லை, அந்த சிங்கக்கூட்டிதான் ஒங்க கைலே என்னென் னிக்கு மிருந்து கிட்டேயிருக்கும் என்று நீங்க சொப் பனத்திலும் நினைக்கிறீர்களா. இன்னைக்கு அவனை அடைச்சுப்பிட்டால் நாளை அவன் தப்பிச்சு ஓடியாந் திர்ரான். பேயாண்டியை உங்க வீட்டுக் கிள்ளுக்கீரை