உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



' தபால்காரனை என் இன்னும் காணோம்' 177 இவ்வுலகம் ஒருக்கணமும் இடைவிடாது உருண்டு கொண்டேயிருந்தது. அம்பட்டன் மாரியப்பன் க்ஷவரம் செய்வதும், வண்ணான் நாதன் வேட்டி துவைப்பதும், குசவன் குட்டையன் பானை சட்டி பண்ணுவதும், வேம்பப்பத்தன் வெள்ளி பொன்களைத் (பிறரிடத்திலிருந்து) தட்டுவதும், சூத்திரன் மூக்கன் மாடு மேய்ப்பதும், கணக்கு முத்துப்பிள்ளை கள்ளக் கும்பிடுபோடுவதும், சேஷன் செட்டி கற்கண்டு விற் பதும், வைதீக ராமண்ணா பிராமணார்த்தம் சாப்பிடு வதும், வக்கீல் சேஷய்யன் கோர்ட்டுக்கு முன்னேயே கொள்ளையடிப்பதும், பிறப்போர் இறப்பதும், இறப் போர் பிறப்பதுமாக நாட்கள் வாரமாய், வாரங்கள் மாதமாய், மாதங்கள் வருஷமாய்க் கொஞ்சமும் கவலை யற்று ஸ்தூலித்துக்கொண்டுவந்தன. இப்படிப் புனர்ஜன்மங்கூட இல்லாமல் இறந்து போய்க் கொண்டிருந்த நாட்களுள ஒருநாள் சந்தை யிற் கூட்டமாகிய சென்னை மாபுரியில் (சென்னப் பட்டணத்தில்) தம்பு செட்டி தெருவில் 321 நெ. வீட்டில் மாடிமீது இரண்டு வாலிபர்கள் பேசிக் கொண்டருந்தார்கள். அவர்களில் பெரியவன் மற்ற வனைப் பார்த்து ' தபால்காரன் வருகிற சமயமாய் விட்டது. இன்றைக்கு வருமா காகிதம்' என்றான். 'அவன் என்ன இழவு இன்னும் வரவில்லை. நேற்று இத் தருவாய்க்கு முன்னேயே வந்துவிட்டானே. நானும், அரைமணியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்று சொல்லிக்கொண்டு மற்றவன் அறையைவிட்டு தெருவுக்கு நேராக மாடியில் வந்து நின்று தபால் காரன் வருகிற வழியைப் பார்த்தான். தபால்காரனைக் காணோம். பிறகு உள்ளே வந்து கடிகாரத்தைப் பார்த்தான். ' இதென்ன சரியான மணியா, நேற்று நீ சாவி கொடுத்தயா? மணி 9-ஆய்விட்டது இன்னும் வரவில்லை' என்று சொல்லிக் கொண்டு மறுபடி வெளியே போனான், மறுபடி உள்ளே வந்து 12)