பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



180 கமலாம்பாள் சரித்திரம் இந்தப் பொழுதை ஓட்டித் தவித்துக்கொண்டிருக்கிற எனக்கு என்ன வேடிக்கை வேண்டியிருக்கிறது. போன ஜன்மத்தில் எந்த நேசமான தம்பதிகளைப் பிரித்தோமோ அந்தப் பாவம் நாம்தான் பிரியும்படி நேர்ந்தது. கடிதமாகிலும் என் விசனத்தை மாற்றி விடுமென்றால் அதுவும் சரியானபடி வருகிறதில்லை. போகட்டும், இப்பொழுதாவது தயவுபண்ணி எழுதி னீர்களே. கொஞ்சம் தாமதப்பட்டால் உடம்பு என் னமோ என்று சந்தேகமாயிருக்கிறது. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணச்சொல்லுகிறது. அப்படி விசனப்பட்டுக் கொண்டிருக்கும்போது தங்கள் கடி தம் வந்தது. தங்கள் தங்கக் கையினால் எழுதின அந்தக் கடிதத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத் தேன். அதைத் திருப்பித் திருப்பி வாசிக்கும்போது தங்களுடன் நேரிலே பேசினார் போல நினைத்துக் கொண்டேன். அதைக்கட்டி. முத்தமிட்டது தங்களைக் கட்டியணைத்து முத்தமிட்டதுபோல இருந்தது. கணையாழியைக் கண்ட சீதையைப் போல எனக்கு சந்தோஷத்திலே கண்கள்கூடத் தெரியவில்லை. தங் கள் கடிதமென்றால் அவ்வளவு சந்தோஷமுண்டாகும் போது நேரிலே காணப்போகிறோமென்றால் எவ்வளவு சந்தோஷமாய் இராது. நான் அவ்விடத்திற்கு அடுத்த வெள்ளிக்கிழமை அப்பா அம்மாளுடன் தங்களையே நேரில் காண கட்டாயமாய் வரப்போகிறேன். குழந்தை நடராஜனைக் குறித்து ராப்பகலாய்க் கதறுவதே எங் களுக்கு மணியமாயிருக்கிறது. அதுவும் அப்பாவும் அம்மாளும் அழுதழுது துரும்பாய் மெலிந்துவிட்டார் கள். அவர்கள் வீணான இந்த ஞாபகத்தை ஒழிக்க எண்ணியே பட்டணம் வருகிறார்கள். என்னையும் விட்டுப் பிரிந்து அவர்கள் எவ்விதம் உயிர் வாழ்வார் கள். அடுத்தவாரம் கட்டாயம் வந்துவிடுவேன். சகுந்தலையை துஷ்யந்தன் பார்த்து 'நீ யார்' என்று கேட்டானே அந்த மாதிரி என்னையும் கேட்பீர்களோ.