பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



182 கமலாம்பாள் சரித்திரம் இந்தக் கடிதம் இன்னாரால் எழுதப்பட்ட தென் றும் இன்னாருக்கு எழுதப்பட்டிருக்கிறதென்றும் நாம் சொல்லாமலே இதைப்படிப்போர் அறிந்திருப்பார் கள். ஸ்ரீநிவாசன் இந்த கடிதத்தை ஆவலுடன் உடைத்து வாசித்தான். பிறகு மூடினான், மறுபடி வாசித்தான். தன் சிநேகிதன் சுப்பராயனுக்கு வாசித் துக்காட்டினான். மறுபடியும் தானாக வாசித்துக் கொண்டான். கண்களில் ஒற்றிக்கொண்டு முத்த மிட்டான். சந்தோஷத்தில் அவனுக்கு வாய் குழ றிற்று. அவன் சினேகிதன் சுப்பராயனும் அதிக சந்தோஷமடைந்து 'உன் பெண்டாட்டி லட்சுமி யில்லை , சரஸ்வதியப்பா' என்றான். ஸ்ரீநிவாசனுக்கு சாந்தி முகூர்த்தமான சமாசாரத்தை நாம் முன்னமே சொல்ல அவகாசப்படவில்லை. அவனும் லட்சுமியும் நளனும் தமயந்தியும் போல வெகு அந்நியோந்நிய மாய் இருந்தார்கள். காதலிருவர் கருத்தொத்து ஆதரவு பட்டதே இன்பம்' என்று சொல்லப்பட்ட இன் பத்தை அவர்களைப்போல் இவ்வுலகத்தில் அடைந்த வர்கள் கிடையாது. ' இகத்துள சுகத்திற்கு அளவு கோலாய் பரத்துள சுகத்தை வரித்த சித்திரமாய்' என்று வர்ணிக்கப்பட்டிருக்கிற உண்மையான அன் பின் மதுரமான அதிரகசியங்களை அவர்களைப்போல் அறிந்து அனுபவித்தவர்கள் இல்லை. சாந்தி முகூர்த்தமாகு முன்னேயே அவர்களிரு வரும் ஒருவருமறியாமல் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீநிவாசன் சிறுகுளத்துக்கு வந்திருந்த நாட்களுள் ஒருநாள் கோயிலுக்குப் போய் சுவாமி தரி சனம் பண்ணிவிட்டுத் தன் மாமனாரகத்து வாசற்றிண் ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுக் குச் சில நாளாகத் தன் பெண்டாட்டியுடன் பேச வேண்டுமென்று ஆசை. ஆனால் சமயங் கிடைக்க வில்லை.. சமயம் கிடைத்தால் தைரியம் உண்டாகிற