184 கமலாம்பாள் சரித்திரம் இருபது வயதுக்கு மேற்பட்டு மணம் செய்தால் தான் புருஷனுடன் சுகித்து வாழக்கூடும் என்று நினைக் கிறார்கள். ஸ்ரீநிவாசன் லட்சுமி இவர்களுடைய நேசத்தை நன்றாய் அறிந்த எனக்கு அப்படித் தோன்ற வில்லை . ஸ்ரீநிவாசன் பி. ஏ. பரீட்சையில் எல்லாருக்கும் முதலாகத் தேறினான். அதன் பிறகு சட்டப் பரீட்சைக் குப் படிக்கும் போது அவனுக்கு சாந்தி முகூர்த்தம் நடந்தது. குழந்தை நடராஜனை யிழந்த முத்துஸ்வாமி யய்யர் லெட்சுமி ஸ்ரீநிவாசன் இவர்களுடைய சந் தோஷத்தில் தன் துக்கத்தை ஒருவாறாக மறந்திருந் தார். அதனால் லட்சுமியைப் புக்காத்துக்கு அனுப்பும் போது அவர் அழுத அழுகைக்கு அளவில்லை. ' என் வீடு இனிமேல் பாழ். அடுப்பங்கரையில் எருக்கு முளைக்கட்டும், இனிமேல் எனக்கு என்ன' என்றும், ' ஐயோ இதற்காகத்தானே பெண்ணைப் பெற்றுக் கெட்டுப் போகாதே என்று சொல்லுகிறார்க' ளென் றும் அவர் விசனப் படும்போது, ஸ்ரீநிவாசன் தகப்ப னார் லட்சுமியைக் கொஞ்சநாள் வைத்திருந்து பிறகு அனுப்பி விடுவதாகச் சொல்லி ஆற்றினார். ஸ்ரீநி வாசன் பட்டணத்துக்குப் போன பிறகு கமலாம்பா ளும் முத்துஸ்வாமியய்யரும் ஒரு தக்க ஜாகையமர்த் திக் கொண்டு தங்கள் பெண் மாப்பிள்ளையோடு இருக்க. உத்தேசித்தார்கள். லட்சுமியினுடைய கடிதம் வந்து சில நாளைக்கெல்லாம் அப்படியே எல் லாருமாகப் பட்டணம் வந்து சேர்ந்தார்கள். அவர் களைக் கண்ட ஸ்ரீநிவாசன் தாயைக் கண்ட கன்று போலவும், துணையைக் கண்ட சக்ரவாகப் பக்ஷிபோல வும் ஆனந்தித்தான். வசதியான ஒரு கிரஹத்தில் அவர்கள் எல்லோரும் வெகு சந்தோஷமாய் வாழ்ந் தார்கள்.