உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சேலை கட்டிய மாதரை நம்பினால்...' 189 - சமுத்திரந்தான் போய் லட்சுமியாம்; அலைகள் தான் குழந்தையாம்.' ஸ்ரீநி.--' அப்படியானால் காற்றிற்கு எத்தனை பெண்டாட்டி. அதோ அந்த மரங்கள் எல்லாம் காற்றிலாடுகின்றனவே. அவைகளும் அதற்குப் பெண் டாட்டிதானோ?' ல.--' புருஷர்கள் எப்பொழுதும் பொல்லாதவர் கள் தானே. அவர்களை நம்பப்படாதல்லவா. அதோ பாருங்கள் காற்று அந்த மரத்தைப்போய் முத்தமிடுகி றது. அந்த மரம் நன்றாயிருக்கிறது! எல்லாரும் இருக்கிறபோதுதான் முத்தமிடுகிறதாக்கும்? என்று கொஞ்சம் கசுகசுவென்று சலித்துக்கொள்வதாகப் பாசாங்கு பண்ணுகிறது.' ஸ்ரீநி. - ' ஆமாம் ஸ்திரீகளுக்கு எப்பொழுதும் பாசாங்கு பண்ணுகிறது தானே தொழில். மாமாலக் காரிகள், "சேலைகட்டிய மாதரை நம்பினால் - என்று சொல்லி முடிக்குமுன் குபீரென்று ஒரு அலை சிதறி ஸ்ரீநிவாசன்மேல் ஜலத்தை வாரித் தூவிற்று. உடனே லட்சுமி தன் வஸ்திரத்தால் அவன் முகத்தைத் துடைத்துவிட்டு, 'இனிமேல் ஸ்திரீகளை வையாதேயுங்கள். வேணும் நன்றாய் வேணும்; பெண்டு களைப் பழிக்கலாச்சா ! திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை' என்றாள். ஸ்ரீநி. - 'போக்கிரி சமுத்திரம். அதிகப்பிரசங்கி சமுத்தி ரம். புருஷனுக்கு அடங்காத பொண்டாட்டி போல சதா கரையிலே மோதிக்கொண்டிருக் கிறது.' ல.-' ஆனாலும் இந்த சமுத்திரத்துக்கு நிரம்பக் கொழுப்புத்தான். உங்களைப்போல சாதுவாக இருக்கப்படாதா.'