பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அலைகளோடு விளையாடல் 191 பண்ணியிருக்கிறீர்கள். ஏகபத்தினிவிரதர். போஜ ராஜாவுக்கு இரண்டாவதாகத் தங்களைத்தான் சொல்ல வேண்டும். அதுதான் தங்களைத் தொடு வதற்கு சமுத்திரம் இவ்வளவு ஆத்திரப்படுகிறது. தொட்டாய் விட்டது. இப்பொழுது அலைகளெல் லாம் "தேன்குடித்த நரி படுகிற பாடு படுகிறது. இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய அலையானது படையெடுத்து யுத்தத்துக்கு வரும் அரசனைப் போல கோஷித்துக் கொண்டு இவர்களைத் துரத்திவர இவர்கள் ஓடினார் கள். பிறகு அவர்கள் கை கோர்த்துக்கொண்டு திரும்பி ஜெல்லிக்கட்டில் , ' நின்று குத்திக்காளை' யுடன் விளை யாடுவதுபோல அலைகளுடன் துரத்தும் போது ஓடி, ஓடும் போது துரத்தி, விளையாடினார்கள். பிறகு சிறு கட்டை ஒன்று அகப்பட, அதை ஜலத்திலெறிந்து ' எனக்கு வேண்டாம் பூசினிக்காய். எனக்கு வேண் டாம் பூசினிக்காய்' என்ற கதையாய் அலைகள் அதை மேட்டில் போட, இவர்கள் அதை மறுபடி ஜலத்தில் போட்டு ஒருவரோடொருவர் போட்டி போட்டு விளை யாடினார்கள். இப்படி ஓடிக் களைத்து வீட்டுக்குத் திரும்பவிருக்கும் சமயத்தில் கடலோசை அவர்க ளுடைய காதில் தீர்க்கமாக நுழைந்தது. இதற்குமுன் தங்களுடைய சொந்த ஆரவாரக் கொதிப்பினால் கடலின் ஆரவாரத்தை அவர்கள் முழுதும் கவனித்து அறியவில்லை. இப்பொழுது அவர்கள் ஆடிப்பாடி அமர்ந்திருந்ததனால் இடைவிடாமல் இம்மூட உலகத் துக்கு ஏதோ ஒரு அரிய பெரிய தத்துவார்த்த ரகசி யத்தை உபதேசித்துக்கொண்டிருக்கிறாற் போன்ற கடலின் ஓசையைக் கிரஹித்து அதன் அர்த்தத்தை யும் அவர்கள் அறியலாயிற்று. லட்சுமி ' இருங்கள், இருங்கள், இந்த சமுத்திர ஓசையைக் காதுகொடுத்துக் கேட்போம்' என்று