பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



212 கமலாம்பாள் சரித்திரம் பிப்போகப் பண்ணிப்போட நானாய்விட்டது' என்றார் தீட்சதர். 'இனிமேல் அவள் வாய்வதை (வாழ்வதை ) பாய்த்துப்பிடயேன்' (கமலாம்பாள் வாழ்வதைப் பார்த்துவிடுகிறேன்) என்று சபதம் கூறினாள் சுப்பம் மாள். முத்துஸ்வாமியய்யர் போன காரியம் முற்றும் பிரதிகூலமாய் முடிந்தது. இவர் சேர்ந்திருந்த வியா பாரச் சங்கத்தில் முக்கிய உத்தியோகஸ்தர்களாயிருந்த இரண்டு பிராமணர்கள் பணம் முழுவதையும் தஸ்கரம் செய்து கொண்டு எங்கேயோ போய்விட்டார்கள். போன இடம் தெரியவில்லை. பாவம் முத்துஸ்வாமி யய்யருடைய சகலசொத்தும் திடீரென்று ஒருவனுக்கு பேதிவந்திறந்தால் எப்படியோ அப்படி ஒரேயடி யாய்ப் போய்விட்டது. நெடுநாள் சேகரித்த பெருந் திரவியம் திடீரென்று போய்விடுமானால் அவருக்கு என்ன வருத்தமிராது? ஆனால் அவர் தன் விசனத்தை விரக்தியினால் கண்டித்துக்கொண்டு காஷாயம் வாங் கிக்கொண்டு அநியாயம் நிறைந்த இவ்வுலகத்தை விட்டுத் தொலைந்துவிடுகிறதென்று தீர்மானம் செய் தார். தன்னை சந்நியாசியாகும்படி கடவுள் தனக்குத் துன்பங்களையுண்டாக்கித் தூண்டுவதுபோல அவருக் குத் தோன்றிற்று. ஊருக்கு வந்து கமலாம்பாளுக்கு ஏதாவது ஒருவழி செய்துவிட்டு ஆச்ரமம் பெற்றுக் கொள்ளுகிறதாய்த் தீர்மானம் செய்துகொண்டு வரும் வழியில் ஆருத்திரா தரிசனம் நேரிட்டபடியால், சிதம் பரத்தில் இறங்கி ருத்திரர் லோகநாசனப் பிரளயஸ்ம சானத்தில் தாண்டவம் செய்வதைப்பார்த்து தானும் தனது துக்கங்களை நசித்து அவற்றின் மேல் ஆனந்தத் தாண்டவம் செய்யவேண்டி விரக்தி வைராக்கியத் தைப் பலப்படுத்திக்கொண்டு போகலாமென்று தில்லை க்ஷேத்திரத்துக்கு வந்து சேர்ந்தார். அபரிமிதமான கூட்டத்தின் மத்தியில் பகவான் உலாவி வருவதை