ஆபத்துக்கிடமான அபவாதம் 217 = யிருந்த அவநம்பிக்கை இப்பொழுது ஒழிந்துபோய் விட்டது. ' அப்படியா பண்ணினாள். அடி. சண் டாளி, பாவி, என்ன மோசம்! எந்தப் போக்கிரிப் பயலோடே இவ்வளவு அக்கிரமம் பண்ணினது அந்த முண்டை ?' என்று கேட்டார். தீட்சிதர் 'அந்த வயிற் றெரிச்சலை யேன் கேட்கிறாய் போ. அந்தக் காவாலிப் பயல் நாராயணசாமியிருக்கிறானோ அல்லவோ, போக் கிலிக் கூத்தாடிப்பயல், அவனோடேதான். சிவசிவா, எத்தனை நாளைப் பழக்கமோ அவர்களிரண்டு பேருக் கும், என்ன இழவோ. அன்றைக்கு என்னவோ போ தாதவேளை, கண்டுபிடித்து விட்டார்கள். ஊரெங்கும் கூக்குரலாய்விட்டது, பாபம் பாபம்' என, சுப்பம் மாள் ' அவனோடே இத்தனை நாள், ஊயை (ஊரை) விட்டு ஓடிப்போயியுப்பள், நான் வயபோதே, "தெயிந் ததோ தெயிந்துபோச்சு, எங்கேயாவது யென்டு பேயுமா ஓடிப்போய்விடவேணு" மெயு சொல்லிக் கொண்டியுந்தாள். இந்தப் பியாமணய் எனக்கு முன் னேயே வந்து விட்டாய் (ர்). அவய்வந்து பத்து நாளாச்சு' என்று சொல்லிமுடிக்க, தீட்சிதர் 'ஏன் பத்து நாளாகப் போவானேன்? நாயிறோடே நாயிறு எட்டு, ஒன்பது, பத்து இன்றைக்குச் சரியாகப் பன் னிரண்டு நாளாய்விட்டது. - முந்தின நாள் சாயந்திரம் தான் அவர் உண்மையாய் வந்தது - நாழிகையாய் விட்டது சுவாமியோடுகூடப் போகவேணும். நீ வரு கிறாயோ ' என, முத்துஸ்வாமியய்யர் ' இல்லை, நீங்கள் போய்விட்டு வாருங்கள்' என, அவரை விட்டுவிட்டு தீட்சிதரும் சுப்பம்மாளுமாகப் போனார்கள். அப்பொழுது முத்துஸ்வாமியய்யருடைய நிலைமை யின்னபடியென்று சொல்லிமுடியாது. 'ஐயோ பக வானே, நீயேன் என்னை இப்படிச் சோதிக்கிறாய். பகவான் என்று நீ ஒருவன் இருக்கிறாயோ அதுவும் இல்லையோ, குழந்தையை யிழந்தேன், சகோதரனை