பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உலகை விட்டொழித்தல் 221 வேண்டியது தான், நானும் தொலையப்போகிறேன்.. உங்களுக்கு நிரம்ப வந்தனம். சீக்கிரம் இந்தப் பாழுல கத்தைவிட்டு வெளியேறுங்கள் ' என்று மரத்துக்கு மரம் புத்திமதி சொல்லிவிட்டு அதைவிட்டுப் புறப் பட்டு ஊர்மத்தியில் வர, ' கொலைக்காரக் கூட்டம், தட்டு வாணிக்கூட்டம்' என்று மேளவாத்யம் கேட் டால் காதைப் பொத்திக் கொண்டும், ஸ்திரீகள் எதிரே வந்தால் கண்ணை மூடிக்கொண்டும், நரகலோக மத்தி யில் போவது போல் விரைவாய்ச் சென்று ' உங்களுக் கும் நமக்கும் இன்றுடன் விட்டது; நாளை நீங்கள் எங்கேயோ நானெங்கேயோ, உங்களை விட்டுப் பிரி வதில் ஒரு பொட்டு கண்ணீர் கூட நான் விடமாட் டேன். சிதம்பரமாம் சிதம்பரம் ; வெட்டவெளியென் றர்த்தம். ஒன்றுமில்லை, சுவாமியுமில்லை, அதுதான் சிதம்பரம். இந்தப் பாழுலகைவிட்டுப் போகிறேன்.. நம்முடைய பாக்கியந்தான் என்ன பாக்கியம்! அப் புறம் தட்டுவாணியாய்ப்போகப் பெண்டாட்டியு மில்லை. பறி கொடுக்கப் பிள்ளையுமில்லை. நம்முடைய பாக்கியமே பாக்கியம்!' என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு கோவிலுக்கருகிலுள்ள ஒர் பாழ்மண்ட பத்தை யடைந்தார். அங்கே பாம்புக ளிருக்கும் என்று ஜனங்கள் அதன் அருகில் வருவதில்லை. இருட்டினவுடன் அந்த மண்டபத்துள் அவர் சென்று படுத்துக்கொண்டு ' மரியாதையாக என் னைப் பாம்பு கடித்தால் கடிக்கட்டும். இல் லையா, கயிறு இருக்கிறது கழுத்திருக்கிறது பார்த் துக் கொள்ளுகிறேன் ! என்று சொல்லிக்கொண்டு படுத்துக் கொண்டார். ' சீக்கிரம் நன்றாய் இருட்ட மாட்டேன் என்கிறதே! இந்தப் பாழ் வெளிச்சம் யாருக்கு வேண்டியிருக்கிறது ' என்று சொல்லிப் படுத் திருந்து சிறிதுநேரத்துக்குப் பிறகு வேண்டிய இருட்டு வந்துவிட்டபடியால் எழுந்திருந்து சுவரில் அணியறைந்து ஓர் கயிற்றை அதில் கட்டி தன்