உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அபயப்பிரதானம் 225 - வடவிருட்சத்தின் நிழலைப்போல் தம்மையணுகி வந்த வர் அனைவருக்கும் அற்புதமான குளிர்ச்சியை உதவி அலையெறிந்து ஒழுகும் கருணா சமுத்திரங்களா யிருந்தன. முத்துஸ்வாமி அய்யருக்கு திடீரென்று தோன் றிய இத்தோற்றத்தைக் கண்டதால் உண்டான பய மெல்லாம் இந்த மகா புருஷருடைய முகத்தாமரை யைத் தரிசித்தவுடன் சூரியனைக் கண்ட இருள் போலப் பறந்துபோய்விட்டது. சாட்சாத் பரம சிவனே பூர்வம் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வலியத் தடுத்தாட்கொண்டது போலத் தன்னையும் தடுத்தாட் கொள்ள இவ்வித இனிய ஸ்வரூபத்துடன் எழுந் தருளினார்போல் அவருக்குத் தோன்ற, அவர் ஆனந்த பரவசராய்ச் சிரமேற் கரங்கூப்பி 'சுவாமி நான் செய் தது அபராதம், மன்னிக்கவேணும் சுவாமி, அடியே னுக்கு ஒன்றும் தெரியவில்லை. சித்தம் பிரமித்து மயங் குகிறது, நான் பண்ணினது அபராதம், க்ஷமிக்க வேணும்' என்று வாய்குழறச் சொல்லிச் சாஷ்டாங்க மாய் நமஸ்காரம் செய்தார். சுவாமிகள் முத்துஸ்வா மியய்யரைத் தன்னருகே வரச்சொல்லி பலமாய் ஆசீர்வதித்துத் தனது வலது திருக்கரத்தால் அவரைத் தடவிக்கொடுத்து குளிர்ந்த பார்வை சாதித்துப் பிறகு 'பயித்தியக்காரன், குழந்தை, ஒன்றும் தெரியவில்லை; அவசரப்படுவார்களா அப்பா, பொருத்துக்கொள். அதைக்காட்டிலும் மேலானதாய் நாம் இந்த உலகத் தில் செய்யக்கூடியது ஒன்றும் இல்லையப்பா ; உண்டு என்று சொல்வதற்கும் நமக்கு அதிகாரமில்லையடா ; சாயந்திரம் சந்தியாவந்தனம் பண்ணினாயோ அப்பா முத்துஸ்வாமி!' என்று வெகு மிருதுவாய்க் கேட்க, முத்துஸ்வாமியய்யர் அதிக வெட்கமடைந்து தலை யைக் கீழே தொங்கவிட்டு மௌனமாய் நிற்க, சுவாமி கள் ' கோயிலில் பொற்றாமரையிருக்கிறது; அங்கே 15