நாதகீதம் 227 வார்த்தைகளைச் சொல்லி அபசாரப்பட்டேன். சுவாமி, நீ இல்லை என்று சொல்ல நானா அருகன்? உன் கோயிலில் இடிவிழ என்று வைத்தும் நான் தான்? உன் மாயை தெரியவில்லை என்று வாழ்த்துவதும் நான் தான். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. உன் செய்கை விசித்திரமாயிருக்கிறது. சுவாமி, நீதான் காப்பாற்றவேணும்' என்று பிரார்த்தனை செய்து கட வுளைப் பல மூர்த்தங்களாலும் தன் மனதில் ஆவா ஹனம் செய்து கொண்டு சந்தியாவந்தனத்தை பக்தி வைராக்கியத்துடன் அட்சரமட்சரமாய் உச்சரித்து அர்க்கியாதிகளுடன் நியமப்படி முடித்து, ' ஐயோ உன் ஸ்வரூபந்தான் என்ன ஸ்வரூபம்! உன் மகிமை தான் என்ன மகிமை! இந்த மேகங்கள், இந்த நட் சத்திரங்கள், மரங்கள், மனிதர்கள், எல்லோருக்கும் நீ தான் அதிபதி. எல்லாமுன்னடிமையே எல்லா முன்னுடைமையே யெங்கணும் வியாபி நீ' என்று சிந்தித்து 'யாரே உன் மகிமையை அறிந்து பூஜிப்பார். எங்கும் நிறைந்திருக்கிற உன்னை நான் எப்படி அர்ச்சிப்பேன்! 'பண்ணேனுனக்கான பூசையொருவடிவிலே பாவித்திறைஞ்சவாங்கே பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப் பனிமல ரெடுக்கமனமு நண்ணேனலாமலிரு கைதான்குவிக்க வெனி னாளுமென்னுளநிற்றி நீ நான் கும்பிடும் போதரைக் கும்பிடாதலா னான் பூசைசெய்ய முறையோ! விண்ணே விணாதியாம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே யவித்தின் முளையே கண்ணே கருத்தே யெனெண்ணே யெழுத்தே கதிக்கான மோன வடிவே கருதிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு கருணாகரக்கடவுளே!