உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



236 கமலாம்பாள் சரித்திரம் லும் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த சந்தோஷத் தில் அவளுக்குப் போன பணம் திரும்பி வந்தது போல உடம்பு பூரித்தது. தன் குழந்தை லட்சுமி நல்ல இடத் தில் சேர்ப்பிக்கப்பட்டதைக் குறித்து திருப்தியடைந் தாள். திருவாதிரை கழிந்த மூன்றாவது நாள் தன் பர்த்தா வருவாரென்று நம்பி அவருக்கும் சேர்த்து பொழுதுக்கு முன்னேயே வெகு நேர்த்தியாய்ச் சமை யல் செய்து வைத்துவிட்டு அவர் வரும் வழியை ஆவ லுடன் எதிர்பார்த்திருந்தாள். வாசலில் வண்டிச் சத் தம் கேட்டால் இதோ வந்துவிட்டார் என்று மயிர்க் கூச்செறிந்து ஓட்டமாய் ஓடி வாசலில் போய்ப் பார்ப்பதும், வராததைக்கண்டு மனம் வருந்தி, நடை தளர்ந்து, உயிர் சோர்ந்து, உடல் ஒடுங்கி வெறுப்புடன் கதவை சாத்தி மெதுவாய் உள்ளே வரு வதுமாய், வாசலுக்கும் உள்ளுக்குமாக ஊசலாடிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் வந்து கதவைத் தட்டுகிறார்போலச் சத்தம் கேட்கும். வாசலில் அவரு டைய வார்த்தைக் குரல் கேட்கிறார்போலே இருக்கும். ஓடோடி வந்து பார்த்துப் போவாள். அவள் உத்தே சப்படி முத்துஸ்வாமியய்யர் வருவதானால் பத்து மணிக்கே வந்துவிடவேண்டும். மணி 11 ஆகிறது, காணோம்; 12 அடித்தது, 1மணி, 2 மணி, 3 மணி யாயிற்று, அப்பொழுதும் காணோம், நாழிகை யேற ஏற, பாம்பு கடித்த விஷம் ஏறுவதுபோல் கமலாம் பாளுக்கு மனத்துயரம் அதிகரித்தது. 'வராமலிருக்க மாட்டாரே, வரும் வழியில் என்ன ஆபத்து நேரிட் டதோ , ஒரு சங்கதியும் சொல்வாரில்லையே ! பட்ட துன்பங்களெல்லாம் போதாதென்று இன்னும் என்ன நேரிட்டதோ! நம்முடைய அதிர்ஷ்டத்துக்கு எல்லாம் வருமே' என்று கண்ணீர் பெருக்கினாள். 'ஐயையோ தெய்வமே, உனக்கு இது தர்மமா' என்று தெய்வத்தை நொந்தாள். சமைத்து வைத்த சோறு அப்படியே கிடக்க, ஒரு திவலை தண்ணீர்கூடக் குடியாமல் தரை - -