27 தன்வினை தன்னைச் சுடும். மறுநாள் பொழுதுவிடிந்தது. விடிந்து இரண்டு நாழிகைக்கெல்லாம் மூடப்படாத மொட்டைத்தலை யும், வாழை மட்டை, கரண்டிக்காம்பு, நாலித்துணி முடிப்பு, கம்பளிக் கயிறு, எருமுட்டை முதலிய அலங் காரசாமான்கள் பிடித்த கையும், சுண்ணாம்பு பூசிய கன்னமும், மஞ்சள் கீறிய நெற்றியுமாய், ஒரு சிறு கைம்பெண் நடு வீதியிலிருந்து ஓடி ஒற்றைவாடை யிலிருந்த சப்-மாஜிஸ்ரேட்டு வைத்தியநாதய்யர் வீட் டுக்குப்போய், 'வைத்திநாதா , வைத்திநாதா, அடே பைத்தியநாதா!' என்று கூவ, உள்ளே இருந்த வைத் தியநாதய்யர் திடுக்கிட்டு ' இப்படி யார் நம்மைக்கூப் பிடக்கூடும்' என்று வாசலில் வந்து பார்க்க, சுப்பிர மணியய்யர் சம்சாரம் பொன்னம்மாள் மேற்சொல் லிய வேஷத்துடன் நின்றுகொண்டிருந்தாள். அவள், 'அடே வைத்திநாதா என் மைத்துனன் இன்னமே இங்கே வரமாட்டார். நான் யார் தெரியுமா? சுப்பிர மணியய்யர் என்று இருந்தாரோ அல்லவோ அவர் பெண்டாட்டி. அவர் போய்விட்டார். நீ ஆயிரம் ரூபாய் கொடு. தீட்சிதருக்குக் கொடுக்க வேண்டும். எனக்கு மருந்து வைக்கத் தெரியுமே. சுப்பம்மாள் கூடப் போயிருந்தாளடா சிதம்பரத்துக்கு. என் மைத்துனர் இங்கே வரமட்டார். இனிமேல்' என்று சொல்லி திடும் திடும் என்று குதித்து, பிறகு 'சுப்பிரமணியய்யர் நல்லவர், செத்துப்போய்விட்டார். நான் கொல்லவில்லை அவரை. நான் கொல்லவில்லை. கண்ணும் விழியும் பார், நீ அடி அவரை, குத்து கரண்டியைக் கொண்டு. கம்பளிக் கயிற்றைக் கொண்டு கட்டி இதோ இந்த வாழைமட்டையைக்