உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பைத்தியம் வெளியேறியது 241 தையும் ஒழித்து விட்டது. 'தன் வினை தன்னை சுடும்' என்ற சொல் அவளுக்கு நன்றாய்ப் பலித்தது, பொன்னம்மாளுடைய நடத்தை துர்நடத்தையானா லும் அவள் அதற்குத் தக்க வலிய சித்தமுள்ள வளல்ல. அவளுடைய மனது தன்னுடைய செய்கைகளைத் தனக்கே ஒன்றுக்குப் பத்தாய்க் காட்டக்கூடிய பூதக் கண்ணாடி போன்றது. சில கண்ணாடி விளக்குகள் தீபத்தின் ஒளியை அதிக பிரகாசமாய்க் காட்டக் கூடியதாயிருந்தும் காந்தி மிதமிஞ்சிப் போய்விட்டால் உஷ்ணம் தாங்காது உடைந்து போவது போல, அவளுடைய மனதும் சுலபத்தில் உடைந்து போகக் கூடியபடி வலிமையற்றது. அவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிற சங்கதியை சங்கரியம்மாள் எவ் வளவு மறைத்து வைத்தும் ஊருக்கெல்லாம் தெரிந்து போய்விட்டது. அவள் வீட்டில் தக்க காவலில் வைக் கப்பட்டாள். நூதன விதந்து ஆனதால் புருஷன் இறந்துபோய் ஒரு வருஷமாகும் வரை வெளியே போகக்கூடாதென்ற ஜாதி நிபந்தனையை மீறி அவள் பலமுறை வெளியேற உத்தேசித்ததாலும், வீட்டுக்கு வந்தவர் போனவர்களிடமெல்லாம் பிதற்ற ஆரம்பித் ததாலும், அவளை சங்கரியம்மாள் ஒரு தனி உள்ளில் போட்டு அடைத்து நிர்ப்பந்தப்படுத்தினாள். யாரா வது பொன்னம்மாள் எங்கே என்று விசாரித்தால் 'படுத்துத் தூங்குகிறாள். பத்து தேய்க்கிறாள்' அல் லது ' அவளுக்கு வெளியிலேயே வரப் பிடிக்கவில்லை. உள்ளேயே முக்காடிட்டு அழுது கொண்டிருக்கிறாள் என்று இவ்வித சமாதானங்களைச் சொல்லி மறைத்து விடுவாள். இவ்வித காவலிருந்தும் அன்று ஏதோ தற்செயலாய் கதவு பூட்டப்படாதிருந்ததால் பொன் னம்மாள் அதுதான் சமயம் என்று சந்தடி செய்யா மல் வெளியேறி அந்தத் தெருவில் கூட நில்லாமல் ஒற்றை வீதிக்கு வந்துவிட்டாள். அது காலை சமய மான தால் ஊரிலுள்ள புருஷர்களெல்லாம் ஆற்றங் 16