உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'அத்திம்பேர்' அம்மையப்பபிள்ளை 259 கொடுத்தார். அவர் இறந்துபோன பிறகு முத்து ஸ்வாமியய்யரும் அந்த உறவைப் பாராட்டி வந்தது மன்றி அவருக்குத் தக்க சீர்வரிசைகள் செய்து நிலம் முதலியன கொடுத்து மதுரைக் காலேஜில் தமிழ்ப் பண்டிதர் வேலையும் சம்பாதித்துத் தந்தார். அம்மை யப்பபிள்ளையும் ஜானகியம்மாளும் இல்லற தர்மத்தை வழுவாது பரிபாலித்து வந்தார்கள். கமலாம்பாள் ஜானகியம்மாளைத் தன் பர்த்தாவின் தங்கையெனவே பாவித்து வந்தாள். அவர்களிருவருக்கும் நிரம்ப நேசம். இப்பொழுது அம்மையப்பபிள்ளையும் ஜானகி யம்மாளும் சேர்ந்துதான் யாத்திரை வந்திருந்தார்கள். கமலாம்பாள் கண் விழித்தவுடன் அம்மையப்ப பிள்ளை எழுந்து அவளை நமஸ்காரம் செய்தார். லட் சுமியும் சுந்தரமும் ' அத்திம்பேர் ' அம்மையப்பபிள்ளை யைக் கண்டு நிரம்ப சந்தோஷித்தவர்களாய் அத்தை யைப்பற்றி யோகக்ஷேம விசாரணை செய்தார்கள். பிறகு எல்லாரையும் அம்மையப்பபிள்ளை தான் இறங்கியிருந்த ஜாகைக்கு அழைத்துப்போனார். ஜானகியம்மாள் இவர்களை நிரம்ப சந்தோஷத்துடன் உபசரித்துச் சமையலுக்கு வேண்டிய சாமான்களை யெல்லாம் கொடுத்து யோகக்ஷேமங்களை யெல்லாம் விசாரித்தாள். முத்துஸ்வாமியய்யருடைய குடும்பம் நிலைகுலைந்து போயிருப்பதைக்கேட்ட ஜானகி அம்மா ளும் அவள் கணவரும் அழுது துக்கித்தனர். பிறகு அழுவதில் பயனில்லையென்று ஒருவரையொரு வர் தேற்றிக்கொண்டு சீர்காழியிலிருந்து சிதம்பரத் துக்கு மறு ரயில் வருமுன்னம் தாங்கள் வண்டிப் பாதையாய்ச் சிதம்பரம் போகவேண்டும் என்று தீர் மானித்து அப்படியே புறப்பட்டார்கள். இவர்கள் போனபிறகு இரண்டு நாளைக்கு சீர்காழிக்கப்பால் ரயில் கிடையாது. அப்புறம் ஏதோ பாலங்களைச் செப்பனிட்டு ரயிலை விட்டார்கள். ஆவலுடன் எதிர் |