பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஞானானந்த மூர்த்திகள் 265 முத்துஸ்வாமியய்யர் 'கடவுளொருவரே யானாலும் அவரையறியவும், அனுபவிக்கவும், பல வழிகளிருக் கின்றன. அந்த வழிகளிலெல்லாம் உத்தமமான வழியை எது போதிக்கிறதோ அதுதான் உத்தமமான மதம்' என்ற விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டி ருக்கும்போது 'நம்முடைய பெரியவர்கள் கடவுள் மூர்த்தங்களை யெல்லாம் ' ஞான ஆனந்த மூர்த்தி களாக ' பாவனை பண்ணி யிருக்கிறார்கள். நானறிந்த மட்டில் வேறெவர்களும் கடவுளை இப்படி யறிய வில்லை. கடவுள் அழிவில்லாத ஆனந்தமூர்த்தி. கண பதியோ ஆனந்தமதம் பொழிந்து அந்த ஆனந்த வெள்ளத்தில் கண்சிறுத்த யானை ஸ்வரூபம். சுப்பிர மணியரோ மயில் வாகனத்தின் மேலேறி ஆனந்தப் பிரேமை பாடுகிறார். மகாவிஷ்ணு பாற்கடலைத் தேடிப் பள்ளி கொண்டிருக்கிறார். நித்திரை வரா விடிலோ கருடன் மீதேறி ஆனந்தமாய் பவனி பண்ணு கிறார். நடராஜனைப்பற்றித்தான் கேட்கவே வேண்டிய தில்லை. சிற்சபையிலானந்த நர்த்தமிடு கருணாகரக் கடவுளே என்று நன்றாய்ச் சொன்னார். மனி தனும் பிரம்மஸ்வரூப மில்லாவிட்டால் அவனுக்கு அவ்வளவு ஆனந்த முண்டாகுமா? உலகந்தான் மனி தனுக்கு விரோதி. ஐயோ அது செய்கிற சந்தடியும், அதன் அற்ப சந்தோஷங்களும் அற்பதுக்கங்களும், மகா அற்பமான சண்டைகளும், சச்சரவுகளும் மனி தனைக் கழுதையாக்கி விடுகின்றன. "இடும்பைகூர் என் வயிறே என்று சொன்னபடி இந்த வயிறு மட் டும் ஒன்று இல்லாவிட்டால் மனிதனுக்குச் சமானமாக யாரைச் சொல்லுகிறது. அவன் அனுபவிக்கவே பிறந் தவன். சுவாமி அனுபவிக்க சக்தியும் கொடுத்து அவ் வனுபவம் சுலபத்தில் கிட்டாதபடி பலமான தடை களையு மேற்படுத்தி யிருக்கிறார். நாம் ஒரு மாம்சத் துண்டை நாய்க்குக் காட்டி தூர வீசியெறிந்து விளை யாடுவதுபோல சுவாமியும் நம்மைச் சோதனை செய்து