பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



முத்துஸ்வாமி அய்யரின் பரி பக்குவம் 267 தது. அவர் அனுபவித்த ஆனந்தத்திற்கு எதுவும் ஈடல்ல. அக்காலத்தில் மற்ற எவ்வித சந்தோஷமும் அவருக்குக் கேவலமாகத் தோன்றிற்று. அவருடைய உள்ளக் கொதிப்பு அலைவீசி யெழுந்தது. அவர் முகம் மலர்ந்த வண்ணமாகவே இருந்தது. கண் போயே போய்விட்டது. தானே பிரம்மமயமானாற் போன்ற ஓர்வித அறிவு அவருக்கு உண்டாயிற்று. புலன்களனைத்தும் அடங்கியிருந்தன. பகவத் விஷய மாகத் தாழ்ந்த குரலில் அருகிலிருந்தவர்கள் பேச அவருக்கு அந்த ஆனந்தம் அதிகப்பட்டது. சொல்ல வறியாத இவ்வித ஆனந்தத்தில் அவர் இருந்தபோது சுவாமிகள் உள்ளே யிருந்து வெளியே வந்தார். அவ ரைக் கண்டவுடன் முத்துஸ்வாமியய்யருக்கு ஆனந்தம் பெருகிற்று. சுவாமிகள் அவர் அருகில் உட்கார்ந்து ' இதுதான் இன்பம், உனக்குப் பரிபாககாலம் சமீபிக் கிறது' என்று சொல்லி உற்சாகப்படுத்த முத்துஸ் வாமியய்யருக்கு ஆனந்தம் கரைகடந்து பெருகிற்று. அவர் வாய்விட்டுச் சிரிக்கவும் தொடங்கிவிட்டார்.. இன்னவிதமான சந்தோஷமென்று அவருக்கு வாய் திறந்து சொல்லமட்டும் கூடவில்லை. மனதில் இன்ன மிர்தம் ஊறிக்கொண்டே யிருந்தது. இவ்விதமாகப் பொழுது போவதே தெரியாமல் இராக்காலம் முழு வதும் கழிந்தது. அது மறுநாளும் தொடர்ச்சியாய் நடந்திருக்கும். ஆனால் காலையில் தம்பட்ட ஓசை களும் சமீபத்தில் ஈனஜாதி ஸ்திரீகளுக்குள் உண் டான சச்சரவுகளின் சப்தமும் அதைக் கெடுத்து விட்டன.