பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



286 கமலாம்பாள் சரித்திரம் கள் வந்தவுடனே கீழே விழுந்து தெண்டனிட்டு அவ ரிருவருடைய பாதத்தையும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டதாயும். அந்த மகாபுருஷர் ' பயப்படாதே! இவளைத் தேடி நானலைந்தது உனக்குத் தெரியுமே' என்று சொல்லித் தேற்றித் திடீரென்று மறைந்த தாயும், கமலாம்பாள் கண்டாள் ஒரு கனவு. கண்டு திடுக்கிட்டு விழித்து 'கடவுளே உன் மகிமையே இது, கனவிலாயினும் கண்டேனே' என்று களித்துச் சந் தோஷத்தால் கண்ணீர் பெருகி விம்மியழுதாள். அவள் கண்டது கனவேயன்றி நனவல்ல. ஆயினும் அவளுடைய பெண்புத்திக்கு அது போதுமானதா யிருந்தது. அந்தக் கனவை மறுபடி மறுபடி ஞாபகத் துக்குக் கொண்டுவந்து அமிர்தபானம் பண்ணினாற் போல் அவள் ஆனந்தித்தாள். மறுபடியும் வருமோ அந்தக் கனவு என்று முயற்சித்தாள். வராததைக் கண்டு கண்ணீர் பெருக்கினாள். ராமா, ராமா, ராமா என்று ராம நாமஸ்மரணையை முன்னிலும் பதின் மடங்கு அதிகமாகச் செய்தாள். கணவனையிழந்த கவலையினும் கனவினை யிழந்த கவலையதிகமாயிற்று. 'கடவுளே உன் மகிமையே மகிமை! நானும் ஒரு பொருட்டென உன் திருவுளம் நினைத்ததே' என மகிழ்ந்தாள். 'பயப்படாதே' என்றா சொன்னாய் ; நீ யிருக்க எனக்கென்ன பயம்' என்று நகைத்தாள். வந்தவர்கள் இன்னும் சிறிது நேரம் இருந்தனர்களா' என ஏங்கினாள். ' வெளிவந்தவரோ போய் மறைந் தார் விலக்கவொருவர் தமைக்காணேன்' என விம்மி னாள். ' ராமன் சீதையைக் கண்டதுபோல் நானும் என் கணவனைக் காண்பேன், என் புருஷநாயகத்தைக் காண்பேன்' எனக் களித்தாள். கமலாம்பாளாவது இப்படியழுவதும், சிரிப்பதுமாக இருந்தாள். லட் சுமியோ முற்றிலும் அழுதவண்ணமாகவே இருந் தாள். ஏதாவது சில சமயம் சிரித்தால் தான் முன் னிருந்த நிலைமையையும், இப்பொழுது இருக்கும்