உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பேயாண்டித்தேவன் பெருந்தன்மை 291 யர் நிர்விகற்பமான மனோ லட்சணத்தை யடைந்த முக்தரானதினால் கடவுளுடைய அருளை வியந்து திர விய முழுவதையும் தானம் செய்துவிடும்படி பேயாண் டித் தேவனுக்கு அனுமதி கொடுத்தார். அதைக்கேட்டு உள்ளேயிருந்த சச்சிதானந்த சுவாமிகள் ' அது உன் செல்வமல்ல, மற்றவர்களுக்காக நீ அதைப் பத்திரப்டுத் தும்படி கடவுள் உனக்கு அனுப்பியிருக்கிறார். அதை எடுத்து வை!' என்று ஆக்ஞாபிக்க, குரு ஆணையை வகித்து அவரும் அப்படியே செய்தார். சிறிது நேரத்துக்கெல்லாம் முத்துஸ்வாமி அய்ய ருடைய முக்கிய சினேகிதனாகிய குழந்தை துரைசாமி யும், அவனுடைய தகப்பனார் ராமசேஷய்யரென்ப வரும் அவ்விடம் வந்து அவரைச் சேவை செய்து உட்கார்ந்தனர். அருகிலிருந்த பேயாண்டித்தேவன் அவ்விருவரையும். சிறிது நேரம் கூர்ந்து பார்த்துப் பிறகு ராமசேஷய்யரை நோக்கி 'சுவாமி, அடி யேன் வந்து விட்டேன். குழந்தைக்கு உரியவர் எதிரவே இருக்கிறார். தங்களுக்கு அவ்வளவுதான் பிராப்தம்' என்று சொல்ல, ராமசேஷய்யர் திடுக் கிட்டு, தன்னுடன் பேசியது பேயாண்டித்தேவனென உணர்ந்து அவனுடைய யோகக்ஷேமத்தையும் எதிர் பாராத வரவையும் விசாரித்து, கிலேசத்துடன் ' யார் குழந்தைக்கு உரியவர்?' என்று கேட்க, 'குழந்தை பயார் மடியில் இருக்கிறதோ அவர்கள் தான் ' என்று பேயாண்டி முத்துஸ்வாமி அய்யரைக் காட்டி மறு மொழி சொன்னான். இவ்வுரை காதில் படுமுன்னமே ராமசேஷய்யருக்குக் கண்ணீர் பிரவாகமாகப் பெரு கியது. அழுதுகொண்டே அவர் முத்துஸ்வாமியய் யரைப் பார்த்து 'சுவாமி தங்களுடைய குழந்தையாம். வளர்த்த வாஞ்சை என்னை விடவில்லை. குழந்தை யைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்லி வெளியே போக ஆரம்பிக்க, முத்துஸ்வாமியய்யர் கட