பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



' பிரிந்தவர் கூடினால் பேசவும் வேடுண்மோ ' 297 பார்த்தாள். அருகே நின்ற முத்துஸ்வாமியய்யருடைய முகம் தென்பட்டது. உடனே கமலாம்பாள் விரைந் தோடி அவர் பாதத்தில் வீழந்து மூர்ச்சித்தாள். முத்து ஸ்வாமியய்யரோ ' கடவுளே, உன் மாயை அகாதமா யிருக்கிறது. சிரிப்பதென்றும், அழுவதென்றும் எனக் குத்தெரியாது. நான் இரண்டும் செய்யாமல் உன் பிர பாவத்தையே புகழ்வேன் ' என்று ப்ரம்மத்தில் லயித் துப் பரவசமானார். இவர்கள் இப்படி ஆனந்தப்பட் டுக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீநிவாசன், லட்சுமி, சுந்தரம், சுப்பராயன் முதலியவர்களும் மடத்திற்கு வழியை விசாரித்துக்கொண்டு வந்து விட்டார்கள். வரவே ஏக கல்யாணமாய் விட்டது. பல பேருடைய பலநாள் துயரம் பகவானுடைய கிருபையால் ஒரே இடத்தில் ஒரு நாழிகையில் நிவர்த்தியாக, சச்சிதா னந்த மடம் சாக்ஷாத் சச்சிதானந்த மடமாகவே முடிந் தது. அலைந்ததும் திரிந்ததும், அழுத்தும் ஏங்கியதும், ஊரூராய் ஒடியதும், வீடு வீடாய்த் தேடியதும் எல் லாம் ஏதோ கனவுபோல் மாற, யாவரும் அடங்காத குதூகலத்துடன் ஆனந்தத் தாண்டவமாடினார்கள்.