உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



300 கமலாம்பாள் சரித்திரம் முதலிய சகலருக்கும் அன்பான முகமன் அளித்து ஊருக்குள் பிரவேசிக்க எத்தனித்தார்கள். ஊர் எல்லையை அவர்கள் மிதித்ததுதான் தாமதம். ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம் ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் யாரும் பம்பம்' என்று சங்கத்தொனியும், ததீம் ததீம் என்ற பேரிகைஒலியும், 'ஜம்ஜம்' என றதாளங்களின் ஒலியும், 'தாம்தாம்' என்ற மத்தள ஒலியும், மேளவாத்தியத்தின் ஓசையும், பாண்டு வாத்தியத்தின் ஓசையும் வேதியர் கோஷமும், அந்தணர் ஆசியும் ஆனந்தமான உற்சவ கோலத்தை உண்டுபண்ணின. இவ்விதம் உற்சாகத் துடன் ஊரை வலம் வந்து யாவரும் தத்தம் விடுதி களில் சேர்ந்தார்கள். ஜனநெருங்கிய காசியையும் கங்கையையும் மறந்து சிறுகுள மென்ற கிராமத்தில் சிலகாலம் நாமும் தங்குவோம். அவ்வூர் அக்கிரஹாரம், கோயில், குளம், நதி, தோப்புகள், மந்தை, மந்தையின் ஒற்றைமரம், கொல்லன் பட்டரை, குத்துக்கல், அரசந்தட்டு, மீன் பாதை முதலிய கிராமச் சின்னங்கள் யாவற்றையும் நாம் மனதுக்குக் கொண்டுவந்து நம்மனோபலத்தால் சிறுகுளத்தை சிருஷ்டி செய்து அதில் சற்று வசிப்போம். சுவாமிகள் முத்துஸ்வாமியய்யரை இல்லறத்துறவி லிருத்தி ஆசீர்வதித்துக் காசி சென்றார். பொன்னம் மாளுடைய நிலைமையை முத்துஸ்வாமியய்யர் கண்டு பரிதபித்து அவள் நிமித்தம் கடவுளை வேண்டுகிறார். அவளுக்கு சித்தம் ஸ்வாதீனப்பட்டிருக்கிறது என்று வதந்தி. ஏதோ முன் இருந்ததற்கு இப்பொழுது "தெளிவு' என்பதற்கு ஐயமில்லை. 'பாப்பா பட்டிய கத்து வெட்டரிவாள்' என்ற குப்பிப்பாட்டி நெடு நாள் வியாதியால் வருந்தி இறந்தாள். சங்கரியம்மாள் கமலாம்பாளுடைய வாழ்வைக் கேட்டு மனம் பொறாது