உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



302 கமலாம்பாள் சரித்திரம் என்றபடி அனேகருக்கும் துன்பமே ஒரு பெரிய மோட்ச சாதனமாயிருக்கிறதாதலால், தனவா னுடைய தனத்தையும், ரூபவானுடைய ரூபத்தையும் போகத்தில் உல்லாசமாய்க் களித்திருப்பவரது போகத் தையும் கண்டு நாம் பொறாமை கொள்ளாது, அவர் றிற்கு ஆளாயிருப்போருக்கிரங்கி, துன்ப ரூபமாகக் கடவுளது அனுக்கிரகத்தைப் பெற்றோரைக் கண்டு கைகூப்புவதே இரகசியமான தத்துவ வழியாம் இதுநிற்க, ஸ்ரீநிவாசனும் லட்சுமியும் சௌக்கியமாகவே யிருக்கிறார்கள். அவர்களுடைய இன்பம் தாழ்ந்த சிற்றின்பமல்ல. உதாரணமாக: ஒருநாள் சிறுகுளத்தி லிருக்கும் பொழுது சாயந்திரம் ஸ்ரீநிவாசன் கொல் லைப்புறத்திலுள்ள தோப்புக்குள் சென்றான். அஸ்தமன மான சமயம் ஆனதால் சூரியனுடைய மெல்லிய ஒளி பரவி எங்கும் பொன்னிறமாயிருந்தது. ஸ்ரீநிவாசன் அந்திப் பொழுதின் ஆனந்தமான சாந்தத்தைக் கண்டு களிப்புற்றான். அங்கு ஓர் அழகிய அரசமரத்தில் திவ்வியமான மல்லிகைக்கொடி ஒன்று அன்பாய்ச் சுற்றிக்கொண்டு அபரிமிதமான புஷ்பங்களை ஏந்தி நின் றது. அதைக்கண்டு' 'பண்டிதன், கொடி, ஸ்திரி ஆகிய மூவரும் ஆஸ்ரயமன்றித் தனித்து விளங்கார் கள் ' என்ற வாக்கியம் ஞாபகத்துக்குவர, அவன் அவ் வரசமரத்தின் கம்பீரத்தையும், யௌவனத்தையும், சாந்தத்தையும், ஆதரவையும், அழகையும், அப்பூங் கொடியின் இளக்கத்தையும், பசுமையையும், மிருதுத் தன்மையையும், புஷ்பசம்பத்தையும், மனோக்கியமான சௌந்தரியத்தையும், அவ்வரசமரத்தை நம்பி, நேசித்து, அன்பாய்த்தழுவி, அலங்காரமாய் நின்ற காட்சியையும் கண்டு பரவசப்பட்டு நின்றான். லட் சுமி அவனை அங்குமிங்கும் தேடிக் காணாது தோப்புப் பக்கம் வர, அவன் மயங்கி நிற்பதைக் கண்டு சந்தடி