பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



306 கமலாம்பாள் சரித்திரம் வைத்திய நாதய்யரவர்கள் வேலையை ராஜிநாமா கொடுத்துவிட்டு சிறுகுளத்திலே வாசத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டு முத்துஸ்வாமியய்யரிடம் உபதேசம் பெற்று சிவராஜயோகப்பியாசம் செய்துவருகிறார். நல்ல ஹிருதயவானானதால் அவருக்கு நல்ல அனுபவங் கள் சீக்கிரத்தில் சித்தியாகுமென்று நான் நினைக் கிறேன். முத்துஸ்வாமியய்யர் குடும்பங்களை அவர் தான் மேல் பார்த்து வருகிறார். கமலாம்பாள் சகலவித பாக்கியத்தையும் திரும் பப் பெற்றும் ராம நாம ஸ்மரணையை விட்டுவிட வில்லை. நாளுக்கு நாள் அவள் பக்தி பெருகிக் கொண்டே வந்தது. அந்த பக்தி விசேஷத்தால் அவ ளுக்கு உலகமெல்லாம் ராமஸ்வரூபமாய்த் தோன் றிற்று. ' பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறை கின்ற பரிபூரணானந்தமே,' என்றபடி மேகம் சூரிய சந்திர நட்சத்திராதிகள் முதல் மரம், மட்டை , மனி தன் ஈறாகச் சகலமும் அவளுக்கு ஆனந்தமான ஸ்ரீராம மயமாகவே தோன்ற, ' எல்லா முன்னுடைமையே, எல்லாமுன் செயலே, எங்கணும் வியாபிநீ' என்று சதா அந்த ராமனையே வாழ்த்திய வண்ணமாய்த் தனக்கென்று ஒன்றுமில்லாது உண்ணு நீர் முதல் அந் நீரிலும் நின்றிலங்கும் அவனுக்கே அர்ப்பிதம் செய்து ' உலகனைத்தும் உன் நாமப் பொருளதையே ஓதிடு மால்' என்று உளமகிழ்ந்து, கதித்தெழும் இராகத் வேஷாதிகள் யாவற்றையும் கண்டித்து அடக்கிக் கொலை புரிந்து, ‘கரவன்றி யிராமர் கணக்கிலவாம் பரவை மணலிற் பலரென்பர்களால் ' என்று பார்க்கும் பொருளனைத்திலும் ராமனையே பார்த்து உலகெங்கும் ஒருவன் என உணரும் உணர்ச்சி யோடு களித்தாள். பாடுவதெல்லாம் ராமனுடைய