பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



20 கமலாம்பாள் சரித்திரம் ஜோதிஷம் என்பது சரியான பதம்) என்று சொல்லு வார்கள். நீங்கள் பேசுவது சூத்திரப்பேச்சாயிருக் கிறதே.' நாகு கொஞ்சம் வருத்தத்துடன், 'நாங்கள் படி யாதவர்கள், எதோடு கூட்டு!' என்றாள். உடனே சுப்பு பொன்னம்மாளைப் பார்த்து : 'அது கிடக்கட்டும். இப்போதுதான் என்ன, ஒரு சகுனத் தைப்பார்த்து உன் மருமகனுக்கே கட்டி விடலாமே!' பொன்னம்மாள் : ' ஊரிலுள்ள தெய்வங்களுக் கெல்லாம் நமஸ்காரம். இனி ஸர்வதேவ வேண்டாம். ஆயிரம் பொன் கொடுத்துப் பெண்ணைக் கட்டினா லும் வேண்டாம்; அப்படி மானம் கெட்டவர்களல்ல நாங்கள்.' சுப்பு: 'உன் அகமுடையானிடம் சொல்லி ஏற்பாடு செய்தால் செய்யலாம்.' பொன்னம்மாள் : 'ஆ, எவ்வள வடா என்றாளாம். நான் சொல்லி இவர்கள் கேட்கிறதும், தம்பி சொல்லத் தான் அண்ணா கேட்கிறதும், என்னமோ சொன்னாப் போலிருக்கிறது. இவர்கள் யாரோ, அவர்கள் யாரோ!' நாகு: 'அதென்ன அப்படி சொல்லுகிறாய், முத்து ஸ்வாமி அப்படி நினைப்பவனல்ல. உன் பிள்ளை சுந்த ரத்தை கண்ணுக்குக் கண்ணாய் வளர்க்கிறானே, காற் நடிக்க சகிக்கிறதில்லையே!" பொன்னம்மாள்: 'அதெற்கென்ன, பிள்ளை வேண் டியிருக்கிறது. சுவாமி கண்விழித்துப் பார்க்கவில் லையே, அதற்கு யாரிடம் முட்டிக்கொள்வது. என் குட்டிச்சுவரிலும் கேடுகெட்டவனாகச் செய்தாயிற்று!' என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு அரைவார்த்தை