உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சத்தியமூர்த்திக்கு ஞாபகச் சின்னம் சத்தியமூர்த்தியைப்போல் ஒரு மனிதர் மேனாட்டில் சுதந்திரமுள்ள நாட்டில், பிறந்திருந்தால் அவர் மகோன்னத பதவியை வகித்திருப்பார். எல்லாரும் அவரை உச்சாணிக் கிளையில் உட்கார்த்தி வைத்திருப்பார்கள். ஆனால் அவர் இந்தியாவில் பிறந்ததோடு மட்டுமன்றி தென்னாட்டில் தமிழ் மண்ணில் பிறந்துவைத்தார். வட நாட்டில் பிறந்த வராக இருந்தாலும் கொஞ்சத்திற்குள் கொஞ்சமாவது ஜனங்கள் அவரைப்பற்றி ஆஹாஊ ஹு' என்றிருப்பார் கள். ஆனால் இத் தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் அவர் செய்த சேவையின் ஞாபகார்த்தமாக பூண்டித் தேக்கத்திற்கு அவர் பெயர் இடுவதை, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய நகர கௌன்ஸிலர்கள் ஆட்சேபித்து சென்னை நகருக்கே பெரும் அபக்கியாதியை ஏற்படுத்தினர். இதுதான் போகட்டும் என்றால் அவர் இறந்து ஒரு வருஷத்திற்கு மேலாகியும் அவரைப்பற்றி ஒரு புஸ்தகம்கூட வரவில்லை. அவருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்கிற பிரஸ்தாபம் எழவே எத்தகைய ஞாப கச் சின்னத்தை ஏற்படுத்தலாம் என்று யோசித்தோம்.. ஒவ்வொரு தமிழன் கையிலும் ஸ்ரீ சத்தியமூர்த்தியைப் பற்றிய ஒரு தமிழ் புஸ்தகம் இருக்கும்படி செய்வதுதான் தகுந்த ஞாபகச் சின்னம் என்று பட்டது. அதன் பலன் தான் இச் சிறு புத்தகம்.