கமலாம்பாள் சில அபிப்பிராயங்கள் தினமணி : 'ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளையும் பாப்பா பட்டியகத்து வெட்டறிவாளையும் அறியாதார் யார்? அழுவதில் நிபுணனாக ஸ்ரீனிவாசனும் லட்சிய வாதியான முத்துஸ்வாமி அய்யரும் தமிழ் நாட்டுக் கிராமங்களில் இன்னும் இருக்கின்றனர். அவர்களை நாம் எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகிறது. எங்கே? கமலாம்பாள் சரித்திரத்தில்தான். இதைவிட வேறு சிபார்சு வேண்டுமோ..' சுதேசமித்திரன் : 'புத்தகத்தை கையில் எடுத்தால் வாசித்து முடித்த பின் தான் கீழேவைக்க மனம்வரும்... கதா ரஸமும் கவிதா ரஸமும் நிரம்பியது.' "பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித் திரத்தை நீ படிக்க வேண்டும். இந்நாவல் தனிச் சிறப்பு வாய்ந்தது." ஸ்ரீ. எஸ். சத்தியமூர்த்தி, (தன் அருமைக் குமாரிக்கு எழுதிய கடிதம) நாளதுவரையில் வெளியான நாவல்களுள் எது தலைமை ஸ்தானம் வகிக்கிற தென்று கேட்டால் 'கமலாம் பாள் சரித்திரம்' என்று கூசாமல் சொல்லிவிடலாம்....