சமாசார-ஸ்திரீகள் 23 -- ஒன்றும் கிடையாது. அதற்கு பதிலாக 'சமாசார-ஸ்தி ரீகள்' என்று சொல்லத்தக்க சிலர் உண்டு. அவர்களு டைய வேலை என்னவென்றால், பொழுதுவிடிந்தது முதல் அஸ்தமிக்கிறவரையில் ஊரைச்சுற்றி குறைந் தது மூன்று தடவை சந்துபொந்துகள் பாக்கிவிடாமல் காற்றைப்போல் நுழைந்து கிராமப் பிரதட்சணம் செய்து, யாராவது புதிதாய் அந்த ஊருக்கு வந்தாலும் சரி, யாரகத்திலாவது இரைச்சல் கேட்டாலும் சரி, யார் ரகசியம் பேசினாலும் சரி, யாராவது சிரித்தா லும் சரி, அழுதாலும் சரி, எங்கே என்ன நடக்கிறது என்று ஜாக்கிரதையாய்க் கவனித்து, தேனீக்கள் பற் பல இடங்களிலும் திரிந்து தேன் திரட்டி எல்லாம் ஒரு மித்து உண்பதுபோல் தங்களுடைய சமாசாரச்சரக்கு மூட்டைகளை அந்த வம்பர் மஹாசபையில் அச்சபை யின் அபிப்ராயத்துக்கு அவிழ்த்து ஆஜர் செய்யவேண் டியதே. இந்த உத்தியோகஸ்தர்களுடைய சாமர்த்தி யம் அதியற்புதமாயிருக்கும். முன்னொருகாலத்தில் ஸ்பானியா முதலிய கிறிஸ்தவ தேசங்களில் ஓர் மதசம் பந்தமான ஸ்தாபனம் இருந்தது. அதன் உத்தியோகஸ் தர்களுடைய தொழில் சாமானியமாய் உத்தியோக சின்னங்கள் ஒன்றுமில்லாமல் ஒரு மனிதனிடத்து சக ஜமாய்ப் பேசுவது போல் பேசி சர்க்கார் மதத்துக்கு அணுவளவேனும் விரோதமாய் அவன் பேசினாலும் சரி, நினைப்பதாகக் காணப்பட்டாலும் சரி, அவனை கச்சேரிக்கு இழுத்துவிடுவதே. தந்திர சக்தியில் அந் தப் பிரபலமான உத்தியோகஸ்தர்கள் கூட இந்த வம் பர் மஹாசபையின் சமாசார ஸ்திரீகளுடைய பாததூ ளியின் விலைபெறமாட்டார்கள். ராஜ்ஜியமாளும் மந்திரிகூட, இவர்களிடத்து இரண்டொருமாதம் சிட் சை பெற்றுக்கொண்டால் நலமாயிருக்கும். அவர்கள் அறியாத பழமொழி இனி ஒளவையாருக்கும் தெரி யாது. எவ்வித தந்திரமுள்ள மீனானாலும் தூண்டில், வலை இவைகளால் அவைகளை எப்படிப் பிடிக்கிறார்