உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



38 கமலாம்பாள் சரித்திரம் வன் என்று எண்ணினாயோ? அப்படித்தான் ஞாபகம் போலிருக்கிறது! கழுதை, நாசமாகப்போகிற சனி யன்.' அவர் மனைவி 'நான் நாசமாய்ப் போய்விடுகிறேன், அப்புறமாவது நீங்கள் சுகமாயிருங்கள் என்றவுடன் முன்கோபிஷ்டராகிய முத்துஸ்வாமி அய்யர் ஆ ! இது தான் தெரியும். போய்விட்டால் குடி கெட்டுப்போகும். பயமுறுத்துகிறாயோ? தொலை சனியனே' என்று ஒரு இடி இடித்து அப்புறம் தள்ளினார். தள்ளவே, பாவம்! கமலாம்பாள் கரகர என்று கண்ணீர்விட்டழத் தொ டங்கினாள். முத்துஸ்வாமி அய்யர் தன் மனைவிமேல் அதிக வாஞ்சையுள்ளவராயிருந்தும் அவளிடத்தில் ஒரு அற்ப குற்றத்தையும் சகிக்கமாட்டார். உலகத்திலுள்ள ஸ்தி ரீகள் எல்லாரிலும் அவள் குணம் சிறந்ததாயிருக்க வேண்டுமென்பதே அவருடைய முக்கிய ஆசை. அவ் வித ஆசைக்கு விரோதமாக அவளிடத்தில் மற்ற ஸ்தி ரீகளிடத்திலுள்ள குறைவு போல் ஏதாயினும் ஒரு சிறிய குறையாவது இருக்கிறதாக அவருக்குத் தென் பட்டால், உடனே வெகு கோபம் வந்துவிடும். பெண் களே கெட்டவர்கள் என்பது அவர் அருமையாய்ப் பாராட்டிவந்த அபிப்பிராயங்களில் ஒன்று. ஆதலால் தன் மனைவி மற்ற ஸ்திரீகள்போல அற்பத்தனமுள்ள வளாகவாவது கோள் சொல்லி என்றாவது அவருக்கு ஜாடையாய்த் தென்பட்டுவிட்டால் போதும். அன் றைக்கு அனர்த்தம்தான். அவர் முன்கோபத்தை அவர் மனைவி தவிர வேறொருவரும் அறியார். சில புரு ஷர்கள் மற்றவர்களிடத்தில் பழகும்போது சர்வ சாந்த முள்ளவர்களாயிருந்தும் தங்கள் மனைவியிடத்து தங்க ளுடைய கோபத்தைக் காட்டுவதை நாம் அனுபவத் தில் கண்டறியலாம். முத்துஸ்வாமி அய்யர் அடிக்கடி தன் மனைவியைக் கோபித்துக் கொண்டாலும் அனேக