பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'உங்கப்பனாணை போகக்கூடாது' 43 பொம்மனாட்டி! இது ஜடம்! என்னை அடக்க வந்து விட்டது. தூங்கு போ, ராத்திரி நிச்சயஸ்ராத்தத் துக்கு உன் அப்பனாணை போகக்கூடாது' என்று மரி யாதையாய் புருஷனைப் பார்த்துச் சொல்லும்போது ஒரு ஸ்திரீ உள்ளே வந்தாள். அவள் பெயர் நாகு. வம் பர் மகா சபை அக்கிராசனாதிபதியான சும்பம்மாள், தான் காலமே கமலாம்பாள் வீட்டில் மூட்டிய கலக நெருப்பு எவ்விதம் எரிகிறது என்று பார்த்து வரும் படி தன் உத்தியோகஸ்தர்களுள் ஒருத்தியாகிய நாகு வைப் பொன்னம்மாளிடம் ஒற்றாய் (வேவுபார்க்க) அனுப்பினாள். இவள் பிரசங்கத்தை நாம் காலமே ஆற்றங்கரையில் கேட்டோமல்லவா? பொன்னம்மாள் முத்துஸ்வாமி அய்யரை 'புருஷக் கைம்பெண்' என்று இகழ்ச்சியாய் வைதாள் என்றும் கமலாம்பாளைத் 'தட்டுவாணிக் கைம்பெண்டாட்டி' என்று வையவில்லை என்றும், ஆனால் சுப்பு பின் சொன்னவிதம் கமலாம்பா ளிடம் சொல்லியிருக்கிறாள் என்றும் நாகுவுக்கு நன் றாய்த் தெரியும். அவள் உள்ளே வந்தவுடன் ' அடி பாவி' என்று கதறிக்கொண்டு, கூச்சலிட்டழுதுகொண்டிருந்த குழந்தையின் கட்டை அவிழ்த்துவிட் டாள். பொன்னம்மாள் அவனை ' போடா உள்ளே ! என்று வாசலில் போகாதவண்ணம் தடுத்துக்கொண்டு 'நாகு! என்னைக் கைம்பெண்டாட்டி என்று வைது அடித்து விட்டுவா என்று இந்தக் கொள்ளிக்கட்டை யைக் கம்பும் கையுமாய் அனுப்பியிருக்கிறாளே ஒரு பொம்மனாட்டி, நான் வைதேனாம், என்னை வந்து இந்த சின்ன எமன் கேட்கிறது என்றாள். நாகு இரகசியம் சொல்லுபவள் போல அவளுடைய காதில் மெதுவாய் 'நீ அவளுடன் இன்றைக்கா பழகுகிறாய்! எனக்கு அவள் சமாசாரம் வெகு நாளய்த் தெரியுமே' என்றாள். இவ்விதம் இவர்கள் பேச்சை இவர்கள் பேசிக்கொண் டிருந்தார்கள்.