பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கல்யாணத்துக்கு என்ன சாக்கு? 47 சம்பந்திகள் தான் கூப்பிட வரவில்லை, அண்ணாவாவது நினைத்துக்கொண்டாரே. வேம்பு, நீ நல்லபிள்ளையப்பா. அவர்கள் சொல்லாமல் கூட நீ கூப்பிடவருவாய்; உனக்கு சமானமா?' என்று சொன்னாள். சுப்புளிக்கு 'தீச்சன் தலையில் புளியம் சாத்துக்கூடையை வைத்த' கதையாய், நம்மை யல்லவோ இவ்வளவு புகழ்கிறாள் என்ற சந்தோஷம் உண்டாய் திக்கிக்கொண்டு 'உஉ உன் மை-மை- மைச்சனர் எ -எ-எங்கே யின்னார், நானா ஆஞ கூ கூ கூப்ட வந்தேதேதேன்' என்று சவுக்கத்தில் பல்லவி சங்கதிகளுடன் மறுமொழி சொன்னான். இந்த திக்குவாய்ப் பாண்டியன் மறுமொழி சொல்லிவிட்டு வீட்டிற்குப் போவதற்குள் அங்கே நிச்சயதார்த்தம் ஆய்விட்டது. 'வருகிற சித்திரை மீ கஅஉ திங்கட் கிழமை' என்று கலியாண முகூர்த்தமும் பார்த்தாகி விட்டது. ஆனால் முத்துஸ்வாமி அய்யருக்கு மட்டும் ஒரு விசாரம். அதென்னவெனில், நம்முடைய தம்பி நிச்சயதார்த்தத்துக்கு ஒரு தலைவலியை சம்பாதித்துக் கொண்டான். கலியாணத்துக்கு என்ன சாக்கு சம் பாதிப்பானோ? ஒரு வேளை ஜுரம் ஏதாவது வந்து விடுமோ என்பதே!