பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தமிழ் தெரிந்தவன் அகப்பட்டுக் கொண்டால்? 49 ஒரு மனிதர் அங்கே வந்தார். அவர் அந்தப் பள்ளிக் கூடத்துத் தமிழ்ப் பண்டிதர். அவர் பெயர் அம்மை யப்பபிள்ளை. அவருக்கு சுமார் ஐம்பது வயதிருக் கலாம். அவர் பிறந்த ஊர், 'ஆடுசாபட்டி' என்று ஐந் தாறு வீடுகளும் ஒரு புளியமரமும் உள்ள ஒரு பெரிய பட்டணம். அவர் அகாத சூரர். எமகம், திரிபு என்று இப்படிப் பாட ஆரம்பித்தாரானால் குரங்குகள் அத் திப்பழத்தை உதிர்ப்பதுபோல் சடசட வென்று உதிர் த்து விடுவார். யாராவது தமிழ் தெரிந்தவன் அவர் கையிலகப்பட்டுவிட்டால் ராமபாணம் போட்டாற் போல மூச்சு விடுமுன்னே முந்நூறு நானூறுக் கணக் காகப் பாட்டுகளை வீசி அவன் காதை சல்லடைக் கண் களாகத் தொளைத்துவிடுவார். - ஒரு காலத்தில் தமிழ் தெரியாத ஒரு பைராகிக்கும் ஒரு சாஸ்திரியாருக்கும் சண்டை உண்டாய்விட்டது. பைராகி தன் வசவு களில் 'காரே, பூரே' என்று அபரிமிதமாய் வைய, சாஸ் திரியார், முட்டாள், போக்கிரி என்றிப்படித் தனக்குத் தெரிந்த வசவுகளை யெல்லாம் வைது பார்த்தார். அவன் வாயொடுங்குகிற வழியாகவில்லை. அய்யர் பழைய வச வுகளுக்கு இவன் கட்டுப்படமாட்டான் என்று நினைத்து புதுமாதிரியாக, 'அடா போடா, புஸ்தகமே, சிலேட்டே, பென்சிலே, கலப்பையே, மோர்க்குழம்பே, ஈயச்சொம்பே, வெண்கலப்பானையே,' என்று இப்படி வாயில் வந்த வார்த்தையை எல்லாம் வசவாக அடுக் கவே, அந்த பைராகி புதுவசவுகள் அகப்படாமல் திண்டாடித் தத்தளித்துப்போனான்.- அதுபோல் அம் மையப்ப பிள்ளையுடன் ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தால் ஆயிரக்கணக் காகப் பாட்டுகளைச் சொல்லி எதிராளியின் வாயை அடக்கி விடுவார். அந்தப் பாட்டுகள் எடுத்த விஷயத் திற்கு சம்பந்தமில்லாவிட்டால் என்ன? அதனால் என்ன குறைவு? பாட்டுகள் பாட்டுகள் தானே ! அது