பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



52 கமலாம்பாள் சரித்திரம் காசம் செய்தார். அவர் இவரை அன்னத்தை சாதம் என்று சொன்னதற்காக 'சாப்பாட்டுராமா' என்று பரிகாசம் செய்யவே, இவர் அவரை 'கவிராயர் குரங்குராயர்' என்றார். (கவி என்றால் குரங்கு என்று அர்த்தம்.) அவர் இவருடைய அம்மைத்தழும்பு நிறை ந்த முகத்தைச் சுட்டிக்காட்டி ' அம்மையப்பபிள்ளை யென்றால் உமக்கே தகும்' எனவே, இவருக்குக் கோப முண்டாகி அவரை அடிக்கச்சென்றார். கவிராயர் 'உமக்கு நான் இளைத்தவனா' என்று திருப்பி அடிக்க வந்தார். இதற்குள் காவல்காக்கும் போலீஸ்காரர்கள் இவர்களுடைய நிலைமையைக் கண்டு 'தமிழ் வித்வான் கள் தர்க்கம், இதில் நாம் பிரவேசிக்கக்கூடாது' என்று அறியாமல், அநியாயமாய் அவர்களைப் பிரித்து விட்டு விட்டார்கள். மறுநாள் காலைப்பொழுது விடியுமுன்ன மேயே கவிராயர் ஒருவரும் அறியாமல் ஊர்போய்ச் சேர்ந்தார். அம்மையப்பபிள்ளை அவர் ஓடிபோய் விட்டாரென்று செவ்வையாய் விசாரித்துக்கொண்டு தான் அவரை வென்றுவிட்டதாகப் பெருமை பேசிக் கொண்டார். அம்மாபட்டியிலோ கவிராயர் அம்மை யப்பபிள்ளையை ஜெயித்துவிட்டதாகப் பிரஸ்தாபம். அன்னப்பட்சியைப்பற்றிய தர்க்கம் இவ்வாறு முற் றிற்று. இவ்வளவு பிரதாபத்தையுடைய அம்மையப்ப பிள்ளையவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்தவுடன் சுற்று முற்றும் கம்பீரமாகக் கடாட்சித்துவிட்டு தமது ஆசனத்திலெழுந்தருளினார். அவரைச் சுற்றியிருந்த வகுப்பு 'மெட்றிகுலேஷன்' வகுப்பு. அப்பொழுது நள வெண்பா பாடம். அதில் சுயம்வரகாண்டத்தில் 'கோதைமடவார்தங் கொங்கை மிசைத்திமிர்ந்த' என்ற பாட்டைப்படித்து விட்டு, தான். படித்ததைக் கேட்டு எல்லோரும் மெச்சுகிறார்களா வென்று சுற்று முற்றும் பார்த்தார். அந்த வகுப்பில் ராமசாமி