58 கமலாம்பாள் சரித்திரம் - - - - - -- -- -- கொண்டு அவர்மேல் படிந்திருக்கும் மையைத் துடைப்பவன் போல் அதை அவர் சட்டைமுழுவதும் தேய்த்து அவர் முகத்திலும் கோரமாகத் தடவவே, அவர், பாவம்! அல்லா பண்டிகைக்கு சிங்காரம் செய் துக்கொண்ட கோமாளிபோல் கண்டோர் நகைக்க நின்றார். அழகுள்ள நல்லபிள்ளை. இவர்பாடு இப்படியிருக்க, அந்த வகுப்புக்குச் சமீ பத்திலுள்ள சரீரப்பயிற்சி செய்வதற்காக ஏற்படுத் தப்பட்ட கொட்டகையில் தங்கள் சொந்தப்பேச்சே பெரிதாக தாழ்ந்தகுரலுடன் அம்மையப்பபிள்ளையின் மாணாக்கரும் மெட்றிகுலேஷன் வகுப்பினருமாகிய ஸ்ரீநிவாசன், சுப்பராயன் என்ற இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ஸ்ரீநி வாசன் என்ற பையனுக்குப் பதினாலு வயதிருக்கலாம்.. அவன் தான் சிறுகுளம் முத்துஸ்வாமி அய்யரிடம் நிச்ச யதார்த்தம் பண்ணிவந்த ராமஸ்வாமி சாஸ்திரிகளு டைய பேரன். அவன் தகப்பனார் நாராயண அய்யர் கலெக்டர் ஆபீசு சிரஸ்ததார். அவனுடைய பூங்கொடி. போல் மெல்லிய சரீரமும், உருக்கியோடவிட்ட தங்கம் போன்ற நிறமும், ரோஜாபுஷ்பம் மலர்ந்தது போன்ற முகமும், ஓயாது சலித்துக் கொண்டிருக்கும் கண் களும், நீண்டு கிளியின் மூக்குப்போல சிறிது வளைந்து முனையில் கூர்மையாயுள்ள மூக்கும், குதித்துக் குதித்து நடக்கும் நடையும், மழலைச்சொல்மாறாத வார்த் தையும், அவன் புத்தியும், உற்சாகமும், சாந்தமும், குணமும் அவனை அறிந்தவர் உள்ளத்தை அடிமைப்