60) கமலாம்பாள் சரித்திரம் - யார் ஓடுவார்கள்' என்றிப்படி அடிக்கடி ஸ்ரீநிவாசன் அவனைப் பார்த்துச் சொல்லுவதால் அவனும் இவன் மேல் வைத்தபொறாமையை இவனைக் கொண்டாடும் மற்றவர்கள் மேல் வெறுப்பாக மாற்றிக்கொள்வான். இப்படி எல்லோருக்கும் சினேகனாயிருந்த ஸ்ரீநிவாச னுக்கு முக்கியசினேகிதன் சுப்பராயன் என்றபையன். அவன் மதுரை தாசில் குப்புசாமி அய்யருடைய பிள்ளை. அவனுக்கு வயது இருபதிருக்கும். மூன்று வருஷகாலமாகத்தான் இருவருக்கும் பழக்கம். ஆனால் அவர்கள் ஒருவரை யொருவர் சந்தித்த முதல் நாளே நெடுநாட்பழகியவர்கள் போல் சினேகிதர்களானார்கள். ஸ்ரீநிவாஸன் படித்துக்கொண்டிருந்த வகுப்பில் புதி தாய் வந்து சேர்ந்த சுப்பராயன் அந்த வகுப்பில் அவன், கணக்கு ஒன்று தவிர மற்றப்பாடங்களில் எல் - லாம் முதல் பையனாயிருக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு அவன் சினேகத்தை சம்பாதித்துக்கொள்ள வேண்டு மென்ற எண்ணத்துடன் பள்ளிக்கூடம் விட்டவுடன் அவனைத் தேடிக்கொண்டு புறப்பட்டான். அன்று 5 மணியடித்தவுடனேயே ஸ்ரீநிவாசன் அகத்திற்குப் புறப்பட்டுவிட்டான். அவன் சில பையன்களுக்கு மத்தியில் போய்க்கொண்டிருந்தபோது வேட்டை நாய் ஒன்று அவர்களை நோக்கி ஒடிவர மற்றப் பையன்கள் எல்லாம் மூலைக்கொருவராய் ஓடிவிட்டார்கள். ஸ்ரீநி வாசன் மாத்திரம் வேகமாய் ஓடக்கூடவில்லை. அந்தக் கொடிய நாய் அவனுக்கு வெகு சமீபத்தில் வந்து விட்டது. அவன் அலறுகிறான். அப்பொழுது திடீ ரென்று அந்த நாய் தலையில் ஒரு பெரிய சிலேட்டும் அதன் பிறகு ஒரு கல்லும் வந்து விழுந்தது. சீனு திரும்பிப் பார்த்தான். தன் பள்ளிக்கூடத்திற்குப் புதி தாய்வந்து சேர்ந்த சுப்பராயன் தான் தன்னைத் தப்பு வித்தது என்று காணுமுன் சுப்பராயன் அவனைத் -தூக்கித்தோள்மேல் வைத்துக்கொண்டான். அந்த