பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அந்தப் பெண்தான் என்னகமுடையாள் 63 ஸ்ரீநிவாசன்.--' அதற்குள் மாமனார் ஆக்கிவிட் டாயா? கைக்கெட்டினது வாய்க்கெட்ட வேணுமே! பாக்கியையும் கேள் ; அப்பொழுது அங்கே ஒரு அகத் தில் 'தடிவியம்' போட்டார்களாம். அங்கே ஒரு சிறு பெண் தம்பூர் வைத்துக்கொண்டு பாட்டுப் பாடினா ளாம், கேள், கம்பராமாயணம் என்ன, தாயுமான சுவாமி பாடல் என்ன, தேவாரம், திருவாசகம், திரு வாய்மொழி, கப்பற்பாட்டு, ஜாவளி இப்படி தினுசுக்கு ஐந்தாறு 'ஜமாய்த்து' விட்டாளாம்; ஏகக்கூட்டமாம். புருஷர்களும் பெண்களும் அதுவும் கம்பராமாயணம் பாடுகிறபோது - கங்கைப் படலத்து முதற்பாட்டுகள் போல இருக்கிறது - குதிக்காதவர்கள் பாவம்; தாயு மானவர் பாடல் பாடுகிறபோது உருகி அழாதவர்கள் பாவமாம். சொல்லுகிறான் சொல்லுகிறான் அதிக அற்புதமாயிருக்கிறது. சொல்லுகிறதிலேயே, அவ னுக்கு ஆனந்தம் பொங்குகிறது. அந்தப் பெண்தான் என்னகமுடையாள்.' சுப்பராயன்.--' ஆ அப்படியா! அவ்வளவு பாட்டா? உன்னகமுடையாளா, பத்துவயதுக் குட்டி யல்லவோ ?' ஸ்ரீநிவாசன்.-'பத்துவயதுக் குட்டியானால் ? இன் னும் கேள். தாயார், பிள்ளை இரண்டு பேரும் சொல்லு கிறார்கள், சொல்லுகிறார்கள் அப்படி சொல்லுகிறார் கள். அவள் குணத்தை ஊர்முழுவதும் கொண் டாடுகிறார்களாம், வீண்வம்பு , இரைந்தசொல் கிடை யாதாம்.' சுப்பராயன்.- நீதான் அதிர்ஷ்ட சாலி அப்பா.' ஸ்ரீநிவாசன்.-'முத்துஸ்வாமி அய்யர் என்பவர் கொழுத்த பணக்காரராம். அவர் மனைவி நிரம்பப் படித்தவளாம். மகாலட்சுமி என்றால் அவளுக்கே தகு மாம். இந்தப் பெண்ணுக்கு அவளும் அவருமாய்