உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'இனிது, இனிது, ஏகாந்தம் இனிது!' 67 கழிந்து போய்விட்டதே' என்று சொல்லிக்கொண்டே உல்லாசமாய், நாற்குணமு நாற்படையா வைம்புலனு நல்லமைச்சா ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா - வேற்படையும் வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே பெண்மை யரசு , என்று பாடிக்கொண்டு உலாத்திக் கொண்டிருந்தான். அப்பொழுது வசந்தகாலம். மிருதுவான தென்றல் வீசிற்று. இளம்பிறைச் சந்திரன் அழகான வெள் ளிக் கோடுபோல் உயரப் பிரகாசித்தது. அதினின்றும் ஜிலுஜிலென்று பொழியப்பட்ட அமிர்த ஊற்றுப் போன்ற நிலவு ஸ்ரீநிவாசனுக்கு அடங்காத ஆநந் தத்தை உண்டுபண்ணிற்று. 'ஆஹா' என்று தலை யசைத்தான். 'என்ன சுகமாயிருக்கிறது' என்றான். அவன் நாவில் இன்னமிர்தம் ஊறிற்று. அவ்வளவு ஆனந்தமாய் 'இனிது இனிது, ஏகாந்தம் இனிது' என்றபடி ஏகாந்தத்தின் இனிமையை அவன் அனு பவித்துக் கொண்டிருக்கிறபோதே சுப்பராயன் வந் தான். அவன் வந்ததைக்கூட இவன் பார்க்கவில்லை. சுப்பராயன் 'ஏன்? விளக்கேற்ற வில்லையோ?' என, ஸ்ரீநிவாசன். 'ஏற்றலாம் வா, சற்று இங்கே உட்காரு' என்று அவன் மடியில் தலைவைத்துக்கொண்டு மழலை திருந்தாத தன் மொழியில் 'இங்கே பார், இந்த இள நிலா எவ்வளவு சுகமாயிருக்கிறது. இந்தத் தென்ற லும், இந்த மரங்களும், இந்தச் சோலைமலர்களும் ஆஹா , பேஷ்! என்ன ராத்திரி! இந்த வேளைக்கு ஓடிக் குதிக்கவேணும். கழுதைகளை இதோ தெருவிலோட் டிக் கொண்டோடுகிறார்களே இவர்கள் கூட இந்த நில வாகிய அருமைச் செல்வத்தை அனுபவிக்கிறார்கள். ஆடிப்பாடி கூத்தாடவேணும்போல இருக்கிறது. ஆயி ரம் மாம்பழம் தின்பதில் கூட இந்த சுகம் கிடையாது. பேஷ்! ஆஹா அதோ தெருவிலோடுகிற குழந்தைக் குக் கூட என்ன சந்தோஷம்! அம்மாள் கூப்பிடுகிறாள்