பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இழவெடுத்த வாத்தியாரும் கில்லாடிப்பசங்களும்! 73 குளம் கலியாணத்துக்குப் போய் வருவதாகக் கூட்டுக் கள்ளயோசனை செய்து கொண்டு ஒருவரொருவராய் அந்த ஊர் காளியம்மன் கோயிலில் வந்து சேர்ந்தார் கள். 'ஒங்காத்திலே கோவிச்சுக்குவா, ஒன்னாலே நடக்கமுடியாது, நீ ஆத்துக்குப் போயிடு' என்று அவர் களால் புத்திமதி சொல்லியனுப்பப்பட்ட காமேசுவ ரன் என்ற ஒரு சிறு பையன் சரசர வென்று வாத்தி யாராகிய நாகேசுவர (Sir) 'ஸாரி' டம் போய் அவர் கள் திருட்டுயோசனையை வெளியிடவே, சாப்பிடு வதற்காக இலையில் உட்காரப்போன நாகேசுவர ஸார்' சாப்பிடாமல் ஒற்றை வேஷ்டியுடன் காளியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டார். அவரைக் கண்டதுதான் தாமதம் உடனே பையன்களெல்லாம் சிறுகுளமார்க் கத்தில் ஓடத்துவக்கினார்கள். அதுகண்டு வாத்தியாரும் 'ஏனடா பையல்களா! நிஜந்தானா? ஓடுவீர்களா? மரியாதையாய் வந்துவிடுங்கள். இல்லாவிட்டால் வெளுத்துவிடுவேன். வந்துவிடுங்கள்; வந்துவிடுங்கள், வந்தால் அடிக்கவில்லை. ஏனடா ஒடுவீர்களா? நிஜந் தானா, நிஜந்தானா?' என்று கூவிக்கொண்டு அவர்கள் பின்னே ஓட, அவர்கள் ' ஆமாம், நிஜந்தான், நிஜந் தான்' என்று சொல்லிக்கொண்டும், நெடுமால் திருமருகா நித்த நித்தம் இந்த இழவா வாத்தியார் சாகாரா வயிற்றெரிச்சல் தீராதா! என்று பாடிக்கொண்டும் ஓடினார்கள். இப்படி அரை மைல் தூரம் ஓடவே வாத்தியார் பசியால் களைத்து ஓடமாட்டாமல் ஓடி ஒருகல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டார். பின்னே திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டு ஓடின பையன்கள் வாத்தியார் விழுந்ததைக் கண்டு ' ஹுய் ' ' ஹுய்' என்று சிரித்து ' வேணும், வேணும்' என்று சொல்லிக்கொண்டு ஓட்டமோட்ட