பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'இதென்ன இப்படி சகுனத்தடை நேரிட்டது!' St கொண்டு ' அவர்கள் கிடக்கிறார்கள். நீ நல்லவள், புத்திசாலி, எழுந்திரு , நல்ல சமயம் பார்த்துக்கொண் டாய்! அகத்துக்குப்போ ; நீ என்ன பண்ணுவாய்! உன்னைச் சொல்லக் குற்றமில்லை' என்றார். அவள் ' எனக்குத் தொண்ணூறு வயதாய்விட்டது ; எனக்கு அடிபடச் சீவனிருக்கிறதாப்பா, முத்துஸ்வாமி, என் தங்கக் குழந்தை, நீ இல்லாவிட்டால் '- என்று சொல்லி முடிப்பதன் முன் அவர் 'சரிதான் போ. எனக்கு நடந்த சங்கதியெல்லாம் தெரியும்போ ; சரி தான்போ , அந்தப் பக்கம்' என்று கோபித்துச் சொல்ல, அவள் எழுந்திருந்து கொண்டு 'நீ என் னடாப்பா அதட்டுகிறாயே! நீ நல்லவனப்பா, உனக்கு சமானமா, என் பிள்ளை சொல்லுவான்-' என, அவர் 'நல்லவனாயிருக்கக் கண்டு தான் இவ்வளவு தூரத் திற்கு வந்திருக்கிறது. நீயும் நல்லவள் தான். அப்புறம் பேசிக்கொள்வோம் போ' என, அவள் தன் துணி களைக் கட்டிச் சுருட்டிக்கொண்டு போய்விட்டாள். அவள் போகவே முத்துஸ்வாமி அய்யர் திரும்பினார். 'இதென்ன இப்படி சகுனத்தடை நேரிட்ட தென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணய்யர், ராம சுவாமி சாஸ்திரிகள் ஆகிய இருவரையும் அவர் பார்த்து அவர்களுடைய யோசனையை யறிந்து சிரித் துக்கொண்டு 'ஏன் மாமா, உள்ளே போவோமே, இது ஒரு வேடிக்கை. இவள் மாதிரி இன்னும் இரண்டு மூன்று பைத்தியக்காரிகள் உண்டு இந்தவூரிலே' என் றார். குப்பி செய்கை சகுனத்தடை யென்று முத்து ஸ்வாமி அய்யருக்கும் பட்டது. ஆயினும் அவளும் பொன்னம்மாளும் முந்தின நாள் தனித்துப் பேசிக் கொண்டிருந்ததை அவர் பார்த்ததால், இவளை அந்தப் பொன்னம்மாளே தூண்டிவிட்டிருப்பாள் என்பது அவருடைய எண்ணம். ஆயினும் நல்ல வேளையாய் மாங்கலியதாரண சமயத்துக்கே வந்துவிடாமல் நம்