பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

其篮慈 கம்பனில் மக்கள் குரல் ஏராலே சேருக்கி எருவாலே நிலத்தை வளமாக்கி நீராலே பைங்கூழை நிலைப்பிக்கும் வேளாளரையன்றி அகலிடத்தில் பிறந்தோர் யாராலே பசி தீர்வர்?’ என்று வினவுகின்ருன், மீண்டும் மீண்டும் உழுது நிலத்தைப் புழுதியாக்கினல் நிலம் நன்கு வளப்பட்டு எல்லாப் பொருள்களும் நன்கு விளையும் என்றும், அதன் காரணமாக நான்மறைகள் சிறக்கும் என்றும், இயல் இசை நாடகத் தமிழ் பொலிவுறும் என்றும், குற்றமற்ற அறச்செயல்கள் நடைபெறும் என்றும், ஆட்சி யும் சிறப்புறும் என்றும் கூறுவான். "தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்' , ' என்றதிருக்குறளின் கருத்தினேயொட்டி இஃது எழுந்ததாக த் கொள்ளலாம். மழைவளங் கரப்பினும் ஆற்று நீரின்றி வற்றிப் போயினும் ஏற்றத்தைக் கொண்டு கிணற்று நீரை இறைத்துப் பயிர்வார்த்தல் வேளாளர் கடனாகும் என்று வலியுறுத்துகின்ருன். துலைநீரின் சிறப்பினை, கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும் மலையிட்ட புயத்தரசர் மணிமகுடம் சூட்டுவதும் தலையிட்ட வணிகர்உயத் தனமீட்டப் படுவதும் நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே" ே என்று புலப்படுத்துகின்ருன். பார்தாங்கும் மன்னுயிரின் பசிதாங்கு பைங்கூழினுக்கு நீர்தாங்கும் வேளாரே நிவந் 25. குறன்-1037 26. ஏரெழுபது-48