பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கம்பனில் மக்கள் குரல் எல்லையில் மறைக ளாலும் இயம்பரும் பொருளி தென்னத் தொல்லையில் ஒன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழச்சிப் பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்த தன்றே" (எல்லை இல் அளவிட முடியாத; தொல்லையில். ஆதியில்; சூழ்ச்சி ஆராய்ச்சி, பரந்தது . பரவி இருந்தது! இது வெள்ளம் பரவுவதைக் கூறும் பாடல். பரம் பொருள் ஒன்றேயாயிருப்பது போல சரயு வெள்ளமும் ஒன்று; பல சமயத்தினர் பரம்பொருளைப் பலபடியாகச் சொல்லுகின்றனர். அங்ஙனமே வெள்ளம் ஏரி, தடாகம் முதலிய இடங்களில் பல பெயர்களைப் பெறுகின்றது. இதில் அமைந்துள்ள பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருள்' என்பதில் மரபு வழிபட்ட உருக்காட்சி அமைந் துள்ளது; (வெள்ளம்) புலர்ந்தது என்பதில் இயக்கப்புல உருக்காட்சியும் பொருந்தியுள்ளது. தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும் மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஒதிய உடம்பு தோறும் உயிரென உலாவ தன்றே: 85. டிெ -19 26, , , 20