பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 + கம்பன் - புதிய பார்வை ஒரு செடியின் சிறப்பை அழகை வெளிப்படுத்திக் காட்டுவது அதனுடைய மலர்களேயன்றோ? ஒரு சிலருக்கு ஒரு சில பொருத்தமில்லாமல் அமைந்துவிடும். ஆபரணங்களில்கூட எல்லாருக்கும் எல்லா ஆபரணங்களும் பொருந்தமாட்டா? அதுபோலக் கல்வியும் செல்வமும் கோசல மகளிர்க்குப் பொருந்தின. அப்பொருத்தம் யாருக்குப் பயன்பட்டது? செடியில் மலர் மலர்ந்தாலும் பிறர் அதனைப் பயன் படுத்துவர். அதுபோல இவர்களுடைய கல்வியும் செல்வமும் நாட்டிற்குப் பயன்பட்டன. மற்றொன்றையும் நந்தல் என்ற சொல்லால் பெற வைக்கின்றான். கல்வியும் ஆணவத்தைத் தரவல்லது; செல்வத்தைப் பற்றிக் கூறவே வேண்டா. இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் அவர்களுடைய ஆணவம் அளவிறந்து சென்றுவிடுமே பொருந்திய செல்வமாகவும், பொருந்திய கல்வியாகவும் அமைந்துவிட்டமையின், இவை அம் மகளிரை ஆணவம் கொள்ளச் செய்யவில்லை. இதிலிருந்து கோசல மகளிரைக் காக்கத்தான் பூத்தலால்' என்ற சொல்லைப் பெய்கிறான் கவிஞன். இனிப் பூத்த அக்கல்வியும் செல்வமும் என் பயனை விளைக்கின்றன? புளியேப்பக்காரனுக்குப் பசியேப்பம் தெரியாது' என்பது பழமொழி. செல்வம் கல்வி இரண்டும் உடையவர்கட்குப் பிறருடைய துயரமும் வருத்தமும் தெரிய முடியுமா? என்ற வினாத் தோன்றத்தானே செய்யும்? அதற்கு விடை கூறுபவன்போல, இக் கோசல மகளிர் பண்பாடுடையவர்கள் ஆகலின், 'வருந்தி வந்தவர்கள் தரமறிந்து ஈயும் இயல்புடையர் என்று கூறுகிறான் கவிஞன். ஈதல் எளிது வரிசை அறிதலோ பெரிது’ (2) என்பது புறப்பாடல். எனவே வருகின்றவர்கள் தரமறிந்து உபசரிக்க வேண்டுமல்லவா? வருந்தி வருபவர் கோசலத்தில் அருமையாக என்றோ ஒருநாள் வருவர். ஆனால் விருந்தினர் அன்றாடம் வருவர். அன்றாடம் வந்தாலும் சிறிதும் மனங்கோணாது விருந்தினரை