பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 143 தேவர் என்பவர் யாவரும் இத்திருநகர்க்கு இறைவற்கு ஏவல் செய்பவர்.............. நரகம் ஒக்குமால் நல்நெடும் துறக்கம், இந்நகர்க்கு பளிக்கு மாளிகைத் தலந்தொறும், இடந்தொறும் பசுந்தேன் துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள் தோறும் அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி களிக்கின்றார் அலால் கவல்கிறார் ஒருவரைக் காணேன் (ஊர்தேடு படலம் - 1, 10, 14, 43) ('பொன்னைக் கொண்டு செய்த மாளிகைகளா? மணிகளைக் கொண்டு பொதிக்கப்பெற்றனவா? மின்ன லையும் வெயிலையும் மாளிகையாகச் சமைத்தார்களா? மாளிகைகள், வெளி இடங்கள், கற்பகச் சோலை எந்த இடமாயினுஞ் சரி, கள்ளை உண்டு களிக்கின்றவர்கள் தவிரக் கவலைப்படுபவர் எவரையும் நான் காணவில்லை.) இவ்வாறு கூறுபவன் யார்? இலங்கையைச் சேர்ந்தவ னல்லன். இராவணனுக்கு நண்பனும் அல்லன். அவன் முழுப் பகைவனாகியவனும், கல்வி, கேள்வி, அறிவு என்பவற்றில் தனக்கு நிகர் மூவுலகினும் இல்லை என்று இராமனாலேயே பாராட்டப் பெற்றவனுமாகிய அனுமன் தான் இவ்வாறு பேசுகிறான். இத்துணைச் சிறந்த நகரமும், அந்த நாகரிகமும் இரண்டு மனிதர்களாலும் குரங்குகளாலும் அழிந்தன. ஏன்? இராவணன் மட்டும் தவறுடையவன் எனின் அவன் மட்டும்தானே அழிய வேண்டும்? பின்னர் ஏன் இலங்கை முழுதும் அழிய வேண்டும். தொடக்கத்தில் கவிஞன் கூறினானே அதன் காரணமாகத்தான் இப் பேரழிவு ஏற்பட்டது. ஐம்பொறி வாளியும் நெறியின் புறஞ் சொல்லாமை யின் அயோத்தி வாழ்ந்தது, ஐம்பொறிகளும் தத்தம்