பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 + கம்பன் - புதிய பார்வை உயிருக்கு ஊறு விளைக்கும் செயலை அவள் தொடங் கினாலும், இவள் பெண் ஆயிற்றே என்று பெருந்தகை நினைத்துச் சும்மா இருந்துவிட்டான்.) மாறுபட்ட கருத்துடையவர்களாய் முனிவனும் இராமனும் நிற்கின்றனர். மாறுபட்ட கருத்துக் கொண்ட இருவரும் சாதாரண மனிதர்கள் அல்லர் என்ற கருத்தை, இருவருக்கும் தருகின்ற அடைமொழியின் மூலம் கவிஞன் வெளிப்படுத்துகிறான். ஒருவன் ‘அண்ணல் முனிவன்; மற்றவன் பெருந்தகை. இராமன் வாயினால் தன் மனக்கருத்தை வெளியிடவில்லை எனினும், முனிவன், குறிப்பால் இராமன் மனநிலை அறிந்துகொண்டான். முனிவன் சினம் எங்கே? முன்னர், தசரதன் இராமனை அனுப்ப விரும்பாமல், அதே நேரத்தில் கடமையைத் தட்டிக் கழிக்காமல், நானே வருகிறேன்' என்று கூறியவுடன், விசுவாமித்திரன் கொண்ட சினம் மூவுலகையும் ஆட்டிவிட்டது. தன் கருத்துக்கு மாறாக யாரேனும் நடந்து கொண்டால், மாபெரும் சினத்தை அடைகிறான் முனிவன் என்பதை அறிகிறோம். ஆனால் அதே முனிவன், இப்பொழுது இராமனிடம் நடந்துகொள்ளும் விதமே முற்றிலும் அவன் இயல்புக்கு மாறுபட்டதாக உள்ளது. எட்டுப் பாடல்களில் கோசிக முனி இராமனுக்குச் சமாதானம் கூற முற்படுவது வியப்பைத் தருகிறது. தந்தையாகிய தசரதன் மறுப்பைக் கண்டு பெருஞ் சினங்கொண்ட முனிவன், மகன் மறுப்பைக் கண்டு ஏன் சினங்கொள்ளவில்லை? மைந்தன் தந்தையைப்போல் இராமன் என்பதை முனிவன் நன்கு அறிந்து வைத்துள்ளான். புலனடக்கத்தால் மைந்தன் முனிவனுடன் ஒப்பவைத்து எண்ணத் தகுந்த சிறப்பைப் பெற்றுள்ளான். எனவே, அவனுடைய மறுப்பைக் கண்டு சினந்து பயனில்லை. முனிவன் சினத்தைக் கண்டு அஞ்சி