பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 331 பண்பைப் பெற்றான்? அவனுடைய புலனடக்கம் ஒன்றுதான் அவனை ஆணவங் கொள்ளாமல் தடுத்துவிட்டது. அகங்காரமாகிய கண்ணாடியை அணிந்துகொண்டு பார்க்கும் இந்திரசித்தனுக்கும், இராவணனுக்கும், அனுமன்சுள்ளியில் உறை குரங்கு இராம இலக்குவர்கள்-அரக்கர்கள் உண்ணும் உணவு! அந்தக் கண்ணாடி இல்லாத வீரர்களாகிய அனுமன் முதலாயினோர்க்கு இந்திரசித்தன் மகாவீரன், பல நாள் போரிட வேண்டிய ஆற்றல் உள்ளவன், என்று படுகிறது. இதுவும் அனுமன் புலனடக்கத்தால் பெற்ற பேறாகும். போர்த்திறம்-கும்பனுடன் இனி இந்தத் துரய வீரனாகிய அனுமன் செய்த போர்களில் ஒன்றிரண்டு காணலாம். கும்பகன்னன் போர்க்களத்தில் சுக்ரீவனைச் சந்திக்கிறான். அவன்மேல் சூலத்தை எறிகின்றான். சுக்ரீவன் மடிந்தான் என்று பார்ப்பவர் பேசும் அந்த வினாடியிலேயே, எட்டினன் அது பிடித்து, இறந்து நீக்கினான், ஒட்டுமோ, மாருதி அறத்தை ஒம்புவான் (கும்பகருணன் வதைப்படலம்-260) இது கண்ட கும்பன் மனந்திறந்து அனுமனைப் பாராட்டுகிறான்: ' - - கருதவும் இயம்பவும் அரிது. உன் கைவலி, அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும் ஒரு தனி உளை; இதற்கு உவமை யாது? என்றான். கும்பகருணன் வதைப் படலம்-22) இவ்வாறு வஞ்சகமில்லாமல் கும்பன் அனுமனைப் புகழ்ந்தது போலவே, அனுமனும் கும்பனைப் புகழ்ந்ததும் உண்டு. மாருதி ஒரு மலையை எடுத்துக் கும்பன்மேல் எறியும்போது, நீ இதனால் சாகவில்லை எனில், நின்னொடு இனிப் போர் புரியேன் என்று கூறி எறிந்தான்.