பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.கம்பன் கண்ட விழுப்பொருள்கள் சொல் என்பது குறியீடே ஒவ்வொரு மொழியிலும் எல்லாச் சொற்களும் பொருள்களைக் குறிக்கும் குறியாகவே உள்ளன. பல்வேறு மொழிகள் ஒரே பொருளைப் பல்வேறு சொற்களால் குறிக்கின்றன. இதன் எதிராகப் பல்வேறு பொருள்களை, ஒருமொழியில் உள்ள ஒரே சொல் குறிப்பதும் உண்டு. அதேபோல, ஒரு பொருளைப் பல்வேறு சொற்கள் குறிப்பதும் உண்டு. ஒரே பொருளைப் பல்வேறு சொற்கள் குறிப்பதும், பல்வேறு சொற்களை ஒரே சொல் குறிப்பதும், அந்த அந்த மொழியின் வளர்ச்சிக்கும் செறிவுக்கும் ஏற்ப நிறைந்து காணப்பெறும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டுத் தோன்றிய இலக்கணமாகிய தொல்காப்பியம், இதனை - எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்காப்பியம்-சொல்-பெயரியல்.) என்றும். வினை வேறுபடுஉம் பலபொருள் ஒருசொல் ஆயிரு வகைய-பலபொருள் ஒரு சொல் வினை வேறு படாப் பல பொருள் ஒரு சொல் (சொல்-கிளவி-52)